லுகேமியா எனப்படும் இரத்தப் புற்றுநோய் கண்டறிய செயற்கை அறிவை (Artificial Intelligence -AI ) பயன்படுத்தி கண்டுபிடிக்கும் வழிமுறையை கண்டுபிடித்துள்ளனர். இதனால் எண்ணற்ற மனித வாழ்வு பாதுகாக்கப்படும்.

ஜப்பான் நாட்டின் மருத்துவ அறிவியல் டோக்கியோ பல்கலைக்கழகம் ஆராய்ச்சியாளர்கள் எண்ணற்ற தரவுகளை கொண்டு மிக தெளிவான முறையில் செயற்கை அறிவை பயன்படுத்தி நோயை கண்டுபிடிக்கும் முறையை அறிந்துள்ளனர்.

லுகேமியா என்றால் இரத்தம் அல்லது எலும்பு மச்சத்தில் உண்டாகும் ஒருவகையான கொடிய புற்றுநோயாகும். இதனை கண்டுபிடிக்க மிக கடினமாக இருந்து வரும் நிலையில் 20 மில்லியன் புற்றுநோயியல் தகவல்களை ஒப்பீடு அதற்கு ஏற்ப எந்த வகையான புற்றுநோய் என்பதனை கண்டுபிடிக்கலாம்.

மருத்தவ வரலாற்றில் மிகப்பெரிய கண்டுபிடிப்பாக கருத்தப்படுகின்ற செயற்கை அறிவு வாயிலாக கண்டுபிடிக்கும் முறையில் மைலாய்டு லுகேமியா என மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த 60 வயது பெண்மனிக்கு நோயின் தாக்கம் குறையாமல் இருந்து வந்துள்ளது. தற்பொழுதைய செயற்கை அறிவு வாயிலாக கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அவருக்கு வேறுவகையான மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

எனவே சரியான புற்றுநோயின் காரணத்தை கண்டுபிடிக்கும் நோக்கில் எண்ணற்ற புற்றுநோய் மாதிரிகளை கொண்டு உருவாக்கப்பட்ட செயற்கை அறிவு கொண்ட  ரோபோ உதவி கொண்டு இனி எதிர்காலத்தில் அறியலாம்.