லூசி வில்ஸ் கூகுள் டூடுல்

கர்ப்ப காலத்தில் அனீமியா அல்லது ரத்தசோகை ஆய்வாளராக விளங்கி லூசி வில்ஸ் (10 மே 1888 – 26 ஏப்ரல் 1964) அவர்களின் 131வது பிறந்த நாளை இன்றைக்கு கூகுள் தனது முகப்பு பக்கத்தில் டூடுல் வாயிலாக அலங்கரித்துள்ளது.

கர்ப்ப காலத்திற்கு முன்பாக ஏற்படுகின்ற ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைவதனை ஆய்வு செய்த லூசி 1920 ஆம் ஆண்டு முதல் 1930 ஆம் ஆண்டு வரை இந்தியாவில்  தனது ஆய்வுகளை மேற்கொண்டார்.

லூசி வில்ஸ் பிறந்தநாள்

இன்றைக்கு நாம் ரத்தசோகை அல்லது அனீமியா பிரச்சனைக்கு தீர்வாக சர்வதேச அளவில் போலிக் ஆசிட் மாத்திரைகளை பயன்படுத்த முக்கிய காரணமாக விளங்கியவர் லூசி வில்ஸ் ஆவார். மே 10, 1888 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் எனும் நகரின் அருகில் உள்ள சட்டன் கோல்டுஃபீல்டு பகுதியில் பிறந்தார். இவர் பெண்களுக்கான முதல் பிரீட்டிஷ் போர்டிங் பள்ளியின் அறிவியல் மற்றும் கணிதம் பிரிவுக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். மேலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நியூஹோம் கல்லூரியில் தாவரவியல் மற்றும் புவியியலில் முதல் கௌரவத்தை பெற்றார்.

1920 ஆம் ஆண்டு இந்தியாவில் பம்பாய் (தற்போது மும்பாய்) நகரில் கருவுற்றிருந்த ஜவுளி சார்ந்து தொழிலில் ஈடுப்பட்டு வந்த பெண்களிடம் தனது ஆய்வினை மேற்கொண்டார். இவரின் ஆய்வின் முடிவில் மோசமான ஊட்டச்சத்து காரணமாகவே பெண்களுக்கு கர்ப்பகால அனீமியா ஏற்படுவதாக கனித்தார். பின்பு இவருடைய ஆய்வகத்தில் வைத்து சோதனை செய்யப்பட்ட குரங்குகளுக்கு பிரீட்டிஷ் Marmite என்பது ஈஸ்ட் சாறு கொண்டு உருவாக்கப்பட்ட உணவினை காலை உணவாக கொடுத்து சோதனை செய்ததில் உருவானதே “வில்ஸ் காரணி” (Wills Factor) ஆகும்.

லூசி வில்ஸ்

image credit- lyellcollection

இந்த ஆய்வின் அடிப்படையிலே தற்போது சர்வதேச அளவில் கருவுற்றுள்ள தாய்மார்களுக்கு folic acid பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது.  உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தாய்மார்களுக்கு உடல்நிலை சார்ந்த மேம்பாடுகளுக்கு நலனுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் லூசி வில்ஸ் அர்ப்பணித்தார்.