250 ஆண்டுகளுக்கு மேலான வராலாற்றை கொண்டுள்ள பின்லாந்து நாட்டின் நோக்கியா நிறுவனம் மொபைல்போன் துறையின் ஆரம்பகட்ட காலங்களில் மாபெரும் புரட்சி செய்த நிறுவனமாக உலக அரங்கில் விளங்குகின்றது

வரலாற்றில் புரட்சிசெய்த நோக்கியா மொபைல்கள் - சிறப்பு பார்வைநோக்கியா வரலாறு

வரலாற்றில் பல்வேறு சாதனைகளை படைத்து நோக்கியா மொபைல்களின் படங்கள் மற்றும் தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளது. படங்களை பெரிதாக காண படத்தின் மீது தொடுக..!

1865 ஆம் ஆண்டு முதல் பேப்பர் தயாரிப்பு தொழிற்சாலையில் தொடங்கிய நோக்கியா வரலாறு பலதரப்பட்ட தொழில்களை கடந்த 1960 ஆம் ஆண்டு முதல் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது கவனத்தை திருப்பியது.

1963 ஆம் ஆண்டில் நோக்கியா டெலிகாம் நிறுவனம் முதல் ரேடியா டெலிபோன்களை ராணுவம் மற்றும் அவசரகால தேவைக்கான போனை அறிமுகம் செய்தது.

வரலாற்றில் புரட்சிசெய்த நோக்கியா மொபைல்கள் - சிறப்பு பார்வை

1982 ஆம் ஆண்டில் முதல் மொபைல்போனை மொபிரா செனட்டர் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதே பெயரில் நோக்கியா கூட்டணி நிறுவனமான சோலோரா என்ற தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனமும் வெளியிட்டது.

வரலாற்றில் புரட்சிசெய்த நோக்கியா மொபைல்கள் - சிறப்பு பார்வை

1987 ஆம் வருடத்தில் நோக்கியா கையில் பிடித்து பேசும் வகையிலான மொபைல்போனை 771 கிராம் எடையில்  மொபிரா சிட்டிமேன் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

1990 ஆம் வருடம் முதல் நோக்கியா நிறுவனம் தன்னுடைய மற்ற பிரிவுகளான ரப்பர் கேபிள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்றவற்றை முற்றிலும் ஒதுக்கிவிட்டு மொபைல்போனை தன்னுடைய பிரதான தொழிலாக மாற்றியது.

வரலாற்றில் புரட்சிசெய்த நோக்கியா மொபைல்கள் - சிறப்பு பார்வை

1991 ஆம் வருடத்தில் உலகின் முதல் ஜிஎஸ்எம் சேவை மொபைலை உருவாக்கிய முதல் அழைப்பினை பின்லாந்து நாட்டின் பிரதமர் ஹாரி ஹோல்கேரி 900MHZ வழியாக ரேடியோலின்ஜா ( இப்போ எலிசா டெல்காம்) என்ற பெயரிலான மொபைல் நிறுவனம் வழியாக ஜூலை 1, 1991 யில் பேசினார்.

1992 ஆம் ஆண்டில் முதல் வர்த்தகரீதியான மொபைல்போன் விற்பனையை நோக்கியா 1011 என்ற பெயரில் 475கிராம் எடையில் அறிமுகம் செய்யப்பட்டது.

வரலாற்றில் புரட்சிசெய்த நோக்கியா மொபைல்கள் - சிறப்பு பார்வை

1994 ஆம் வருடத்தில் நோக்கியா 2110 மொபைல்போன் வழியாக அழைப்பு வந்தால் ரிங்டோன் ஒளிக்கும் வகையில் அறிமுகமானது.

1996 ஆம் வருடத்தில் நோக்கியா 8110 என்ற பெயரிலான சிலைடர் போன் பயன்பாட்டுக்கு வெளியிடப்பட்டது.

வரலாற்றில் புரட்சிசெய்த நோக்கியா மொபைல்கள் - சிறப்பு பார்வை

1998 ஆம் ஆண்டு நோக்கியா நிறுவன வரலாற்றில் புதிய மைல்கல்லாக  மோட்ரோலா நிறுவனத்தை பின்னுக்கு உலகின் நெ.1 மொபைல் தயாரிப்பாளராக உருவானது. அதன் தொடர்ச்சியாக 14 ஆண்டுகள் உலகின் நெ.1 நிறுவனமாக விளங்கியது.

வரலாற்றில் புரட்சிசெய்த நோக்கியா மொபைல்கள் - சிறப்பு பார்வை

1999 ஆம் ஆண்டில் நோக்கியா 3210 என்ற பெயரில்  வெளியிடப்பட்ட மொபைலில் எஸ்எம்எஸ் , செமினல் கேம் ஸ்நேக் போன்றவை இடம்பெற்று இளைஞர்களின் விருப்பமான மொபைலாக விளங்கியது.

2000 ஆம் வருடத்தில் நோக்கியா 3210 மொபைலின் மேம்படுத்தப்பட்ட மாடலாக நோக்கியா 3310 அறிமுகம் செய்யப்பட்டு ஸ்நேக் 2 கேம் போன்றவற்றை பெற்று இன்றைய உலகின் நவீன கேம்களுக்கு மொபைலில் அடிதளத்தினை இட்டதே இந்த மொபைல்கள்தான். தற்போது மீண்டும் 3310 களமிறங்கியுள்ளது

வரலாற்றில் புரட்சிசெய்த நோக்கியா மொபைல்கள் - சிறப்பு பார்வை

2003 ஆம் வருடத்தின் மீண்டும் மாபெரும் புரட்சிகமான ஒரு மாடலை அறிமுகம் செய்தது. உலகின் அதிகம் விற்பனையான ஒரே மொபைல் என்ற பெருமையுடன் 1 பில்லியன் மொபைல்களுக்கு மேல் விற்பனை ஆன நோக்கியா 1100 ஆகும். அறிமுகம் செய்து இரண்டு வருடங்களில் 1 பில்லியன் போன்கள் என்ற இலக்கினை அடைந்து நைஜீரியாவில் 1 பில்லியன் மொபைலை விற்பனை செய்தது. ஸ்மார்ட்போன்களுக்கு மத்தியலும் நோக்கியா 1100 தேடுபவர்கள்தான் அதிகம்.

வரலாற்றில் புரட்சிசெய்த நோக்கியா மொபைல்கள் - சிறப்பு பார்வை

2005 ஆம் ஆண்டில் முதன்முறையாக கேமராவுடன் இணைந்த மொபைல்போனை நோக்கியா N வரிசையின் வாயிலாக வெளிப்படுத்தியது. மேலும் 3ஜி சேவையுடன் கூடிய மொபைலாக விளங்கியது.

வரலாற்றில் புரட்சிசெய்த நோக்கியா மொபைல்கள் - சிறப்பு பார்வை

2006 ஆம் ஆண்டில் வெளிவந்த நோக்கியா 5310  எக்ஸ்பிரஸ் ம்யூசிக் சீரிஸ் எக்ஸ்பிரஸ் வேகத்தில் 10 மில்லியன் மொபைல்களை விற்பனை செய்தது.

வரலாற்றில் புரட்சிசெய்த நோக்கியா மொபைல்கள் - சிறப்பு பார்வை

2008 ஆம் ஆண்டில் நோக்கியாவின் முதல் டச்ஸ்கீரின் மொபைல் 5800 எக்ஸ்பிரஸ் ம்யூசிக் வெளியாகி மிக விரைவாக 13 மில்லியன் மொபைல்களை விற்பனை செய்தது.

2009 ஆம் ஆண்டில் நோக்கியா எக்ஸ்6 மொபைல்கள் ஸ்மார்ட்போன் உலகத்தில் களமிறங்கியது.

வரலாற்றில் புரட்சிசெய்த நோக்கியா மொபைல்கள் - சிறப்பு பார்வை

2013 ஆம் ஆண்டில்  நோக்கியா லூமியா களமிறங்கியது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் அதிகரிக்க தொடங்கிய 2010 ஆம் ஆண்டு முதலே நோக்கிய சறுக்கலை சந்திக்க தொடங்கியது.அதன் பிறகு 2014 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் குழமம் நோக்கியாவின் மொபைல் சேவை பிரிவினை கைப்பற்றியது.

வரலாற்றில் புரட்சிசெய்த நோக்கியா மொபைல்கள் - சிறப்பு பார்வை

மே 18 , 2016யில் மீண்டும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தயாரிக்கும் என்ற அறிவிப்பினை வெளியிட்டது. இந்த வருடத்தின் இறுதியில் நோக்கியாவின் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வெளியாகி பட்டயை கிளப்ப தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவின் ஜூன் 13ந் தேதி ஆண்ட்ராய்டு மொபைல்கள் வெளியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here