பிளிக்கார்ட் நிறுவனம் பிக் ப்ரீடம் சேல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 72வது சுத்திர தினத்தை முன்னிட்டு ஆன்லைன் ரீடைலர் நிறுவனமான பிளிக்கார்ட் பிக் ப்ரீடம் சேல்-ஐ வரும் 10 தேதி தொடக்க உள்ளதாகவும், இந்த சேல் 12-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தொடரும் என்றும் அறிவித்துள்ளது.

வரும் 10 முதல் தொடங்குகிறது  பிளிக்கார்ட் பிக் ப்ரீடம் சேல்

இந்த சேல், நடக்கும் நாட்களில் பிளாக்பஸ்டர் சலுகை ஒன்றையும் பிளிக்கார்ட் நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை. விலை குறைப்பு சலுகைகள், ரஷ் ஹவர் சலுகைகள், ப்ரீடம் ஹவர் மற்றும் 72 மணி நேர சேல் நேரத்தில் மணிக்கு ஒரு சலுகை ஆகியவைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட்டின் பிக் ப்ரீடம் சேல்-ஐ பொறுத்தவரை, சிட்டி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு 10 சதவிகித கேஸ்பேக் சலுகை அளிக்கப்பட்டுள்ள போதும், அதிகபட்சமாக எந்த அளவுக்கு பொருட்களை பெறலாம் என்ற லிமிட் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஒவ்வொரு 8 மணிநேரத்திற்கும் பிளாக்பஸ்டர் டீல் மற்றும் பிரைஸ் கிராஸ் ஆபர்கள் அறிவிக்கப்படும் என்று பிளிக்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தவிர ரிவோல்டரி டீல் களுடன் கூடிய ரஷ் ஹவர் சேல், ஆகஸ்ட் 10ம் தேதி 12 am முதல் 2 am வரையும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, 72 மணி நேர சேல் கால கெடுவில் ஹவர்லி டீல்கள் அறிவிக்கப்பட உள்ளது. இது கடந்த சேல்-இன் போது அமேசான் நிறுவனம் அறிவித்தது போன்றே இருக்கும். கடைசியாக அனைத்து பொருட்களையும் சலுகை விலையில் விற்பனை செய்யும் “ப்ரீடம் கவுண்டன்” 7.47 pm மற்றும் 8.18 pm ஆகிய 31 நிமிடங்களில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 10 முதல் தொடங்குகிறது  பிளிக்கார்ட் பிக் ப்ரீடம் சேல்

அமேசான் இந்தியா நிறுவனமும் தனது ப்ரிடம் சேல்-ஐ அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் இந்த சேல்-ஐ, பிளிக்கார்ட் அறிவித்துள்ள தேதிக்கு முன்பாகவே, அதாவது வரும் 9ம் தேதியே தொடங்க உள்ளது. வரும் 9ம் தேதி தொடங்கும் இந்த சேல், 12ம் தேதி வரை தொடரும் என்றும் அமேசான் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

அமேசான் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், தனது ப்ரிடம் சேல்-லில் ஒன் பிளஸ் 6, ரியல்மீ 1, மோடோ ஜி6 மற்றும் மற்ற போன்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்பிஐ கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்குபவர்களுக்கு 10 சதவிகித கேஸ்பேக் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.