சமூகவலைதளங்களில் உள்ள போலி கணக்குளை வித்தியாசப்படுத்தும் வகையில் வெரிஃபைடு மார்க் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது வாட்ஸ்ஆப்பிலும் இதோபோன்ற வெரிஃபைடு கணக்குளை செயல்படுத்த உள்ளது.

ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட முன்னணி சமூக வலைதளங்களில் அதிகார்வப்பூர்வமாக பக்கத்தை அறிந்து கொள்ள நீல வண்ணத்திலான வெரிஃபைடு மார்க் பயன்படுத்தப்படுகின்றது.

வாட்ஸ்அப் வெரிஃபைடு

சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகின்ற போலி முகங்களை கண்டறியவதற்கு பிரபலங்கள் மற்றும் மிகப்பெரிய நிறுவனங்களில் அதிகார்வப்பூர்வ கணக்குகளை வெரிஃபைடு எனப்படும் சரிபார்ப்பு முறையினால் சரியான கணக்கை பயனாளர்கள் பின்தொடர வழி வகுக்கின்றது.

வாட்ஸ்அப்பிலும் பச்சை நிறத்தில் வெரிஃபைடு வசதி விரைவில் வரவுள்ளதாக WABetaInfo தகவல் வெளியிட்டுள்ளது. வர்த்தக ரீதியான தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் மொபைல் நம்பர்களின் நம்பகதன்மைக்காக உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கையை மேற்கொள்ள இந்த வசதி கொண்டுவரப்பட உள்ளது.

image source- wabetainfo

வெரிஃபைடு குறியீடுக்கு கீழே நிறுவனம் மற்றும் நபர்களின் அதிகாரப்பூர்வ முகவரி, இணையதளம் உள்ளிட்ட விபரங்கள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரிபார்ப்பு கணக்கினை பெறுவதற்கு Business Info என்ற பக்கத்தை புதிதாக வாட்ஸ்அப் செயல்படுத்த உள்ளதால்,இதனை தனிநபர்கள் பயன்படுத்த இயலாது, ஆனால் வர்த்தக ரீதியான பயன்பாட்டாளரின் நம்பகதன்மையை வாட்ஸ்அப் வெரிஃபைடு உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.