வாட்ஸ்அப் செயலில் அடுத்து வரவுள்ள புதிய வசதி இதுதான்.. தெரிந்து கொள்ளுங்கள்

  Ads

  பிரபலமான வாட்ஸ்அப் செயலில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வசதியை தொடர்ந்து புதிதாக வாட்ஸ்அப் சாட் பயன்பாட்டு தரவுகளை தெரிந்து கொள்ளும் வகையிலான வசதியை வழங்க உள்ளது.

  வாட்ஸ்அப் சாட்

  பில்லியன் மக்களுக்கு மேல் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் ஆப்பில் புதிதாக கடந்த பிப்ரவரி 24 ,2017 அன்று அறிமுகம் செய்யப்பட்ட ஸ்னாப்சாட் வசதியை போன்ற ஸ்டேட்டசை வழங்கியதை தொடர்ந்து அடுத்து வரவுள்ள பதிப்பில் இடம்பெற உள்ள வசதியின் முக்கிய அம்சம் இணையத்தில் கசிந்துள்ளது.

  விண்டோஸ் 10 மொபைலில் வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பான 2.17.86 ல் சோதனை செய்யப்பட்டு வரும் வசதியானது. இரு நபர்களுக்கு இடையே பகிர்ந்து கொண்ட தகவல்களை வரிசைப்படுத்தி எவ்வளவு தரவுகளை கொண்டுள்ளது என்பதனை காட்டும் வகையில் அமைந்துள்ளது. அதாவது உங்கள் நண்பர்களுக்கு இடையில் பகிரப்பட்ட டெக்ஸ்ட் , படங்கள் , வீடியோ மற்றும் GIF படங்களின் அளவுகளை  காணும் வகையில் அமைந்துள்ளது. இதன் காரணமாக அவற்றை நீக்குவதனால் அப் இயல்பாக இயங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  இந்த வசதி தற்பொழுது பீட்டா நிலையை பயன்படுத்துபவர்களுக்கு விண்டோஸ் 10 மற்றும் விண்டோஸ் 8.1 மொபைல்களில் கிடைக்கின்றது. விரைவில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயனர்களுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.

  சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 24 மணி நேர வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் பெரிதாகஸ்  கவரவில்லை என்பதே  உண்மையாகும். அதனால் மீண்டும் பழைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வசதி இணைக்கப்பட உள்ளதாக சில தகவல்களும் வெளியாகியுள்ளது. எனவே புதிய இருப்புநிலை வசதி ஆப்ஷனலாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  Comments

  comments