உலகளவில் 1.2 பில்லியன் பயனாளர்களை பெற்றுள்ள வாட்ஸ்அப் சமூக வலைதளத்தின் வீடியோ அழைப்புகளில் முலிடத்தை இந்தியா வகிப்பதாக வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் வீடியோ கால்

120 கோடிக்கு மேற்பட்ட மக்கள் பயன்படுத்துகின்ற வாட்ஸ்அப் செயலியை இந்தியாவில் 20 கோடிக்கு மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலில் மெசேஜ் தவிர படங்கள், GIF,  வீடியோ உள்பட அழைப்புகள் மற்றும் வீடியோ கால் என பலவற்றை பெறலாம்.

இந்த செயலில் கடந்த வருடம் நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட வீடியோ காலிங் வசதியை சர்வதேச அளவில் தினமும் 340 மில்லியன் அதாவது 34 கோடி நிமிட வீடியோ கால் வசதியை பயன்படுத்துகின்றனர். இதில் 50 மில்லியன் அதாவது 5 கோடி நிமிட வீடியோ அழைப்புகளை தினமும் இந்தியர்கள் மேற்கொள்கின்றனர் என வாட்ஸ்அப் அறிக்கை தெரிவிக்கின்றது.

2ஜி , 3ஜி மற்றும் 4ஜி என எந்த நெட்வொர்க் சேவையிலும் வாட்ஸ்அப் வீடியோ காலிங் வசதியை பெறலாம் என்பதனால் அனைவருக்கும் ஏற்றதாக அமைந்துள்ளது.

அடுத்த அப்டேட்டில் வாட்ஸ்அப் செயலில் மூன்று அழைப்புகளை பின் செய்யும் வசதியை வழங்க உள்ளது.