உலகின் முன்னணி மெசேஞ் சேவை வழங்கும் தளமான வாட்ஸ்ஆப் செயலில் புதிய அன்சென்ட் மற்றும் எடிட் வசதிகளை வழங்க உள்ளது. தற்பொழுது பீட்டா நிலையில் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் அப்டேட்

  • 1 பில்லியனுக்கு மேற்பட்ட பயனர்களை கொண்டதாக வாட்ஸ்அப் இயங்குகின்றது.
  • அனுப்பி செய்தியை நீக்கவோ அல்லது திருத்தி எழுதும் வகையிலான வசதி வழங்கப்பட உள்ளது.
  • லைவ் லோகேஷன் ஷேரிங் வசதியில் கால அளவை நிர்னையம் செய்யலாம்.

வாட்ஸ்அப் செயலில் சில மாதங்களுக்கு முன் ஸ்னாப்சாட் செயலில் உள்ளதை போன்ற படங்கள் மற்றும் வீடியோவை ஸ்டேட்டஸாக வைக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து பயனர்களின் விருபத்தின் பேரில் மீண்டும் பழைய டெக்ஸ்ட ஸ்டேட்டஸ் அறிமுகம் செய்யப்பட்டது.

லைவ் மேசேஜ் வசதியாக இருக்கின்ற இடத்தை உடனடியாக ஷேர்செய்யும் வகையில் லைவ் லொகேஷன் வசதியில் எவ்வளவு நேரம் அந்த இடத்தில் இருப்போம் என்பதனை பகிரலாம்.

வரவுள்ள புதிய அப்டேடில் ஒருவருக்கு நாம் அனுப்பிய செய்தி தேவை இல்லையெனில் கருதினால் அனுப்பிய ஐந்து நிமிடங்களுக்குள் அதனை அன் சென்ட் (unsend ) செய்யவோ அல்லது திருத்தி எழுதவோ (edit)செய்யும் வசதி பீட்டா நிலையில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அனுப்படுகின்ற தகவலில் குறிப்பிட்ட பகுதியை மேற்கோள் செய்து காட்டுவதற்கு இட்டலிக் மற்றும் போல்ட் ஸ்டைலில் டைப் செய்யும் வசதியையும் அறிமுகபடுத்தபடவுள்ளது.

அடுத்த அப்டேட்டில் மற்றொரு வசதியாக வாட்ஸ்அப் எண்ணை மாற்றினால் மிக இலகுவாக எண்ணைமாற்றும் வகையிலும் இதனை நண்பர்களுக்கு தெரிவிக்கும் வகையிலான வசதியை வழங்குகின்றது.

விரைவில் இந்த வசதிகளை அடுத்த வாட்ஸ்அப் அப்டேட்டில் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here