1 பில்லியனுக்கு மேற்பட்ட பயனாளர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் செயலில் பல்வேறு புதிய வசதிகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய வாட்ஸ்அப் வசதிகள் ஆண்ட்ராய்டு , ஐஓஎஸ் மற்றும் வின்டோஸ் போன்களில் கிடைக்கும்.

புதிய வாட்ஸ்ஆப் வசதிகள் என்ன ? ஸ்னாப்சாட் வசதி ?

புதிய வாட்ஸ்அப்

புதிய மேம்பாட்டில் 24 மணி நேரத்துக்கு ஒரு ஸ்டேட்ஸ் வைக்கும் முறையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் எழுத்துகள் மட்டுமல்லாமல் படங்கள் , வீடியோ , GIF போன்றவற்றை வைக்க இயலும்.இதனை 24 மணி நேரத்துக்கு பிறகு காலாவதியாகும் நிலையிலும் வைக்கலாம். இந்த வசதியானது ஸ்னாப்சாட் ஆப்சில் உள்ளதை போன்றதாகும்.

புதிய வாட்ஸ்ஆப் வசதிகள் என்ன ? ஸ்னாப்சாட் வசதி ?

விரைவில் 8வது பிறந்தநாளை கொண்டாட உள்ள வாட்ஸ்அப் இந்த வசதியை அதன் தொடக்கமாக வழங்க உள்ளது. முதற்கட்டமாக இந்த சேவையை பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்தில் வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் பல்வேறு நாடுகளுக்கும் , சர்வதேச அளவிலும் அடுத்த சில வாரங்களுக்குள் கிடைக்கும்.

வாட்ஸ்அப் தங்களுடைய பயனர்களுக்கு சிறப்பான வசதிகளை தொடர்ந்து வழங்கும் நோக்கில் மேம்படுத்தி வருகின்றது. வருகின்ற பிப்ரவரி 24ந் தேதி வாட்ஸ்அப் 8வது பிறந்த தினமாகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here