வால்ட் 7 என்ற பெயரில் விக்கிலீக்ஸ் தளம் வெளியிட்டுள்ள அமெரிக்காவின் உளவு பிரிவான சிஐஏ என்ற அமைப்பினை பற்றி 8,761 ஆவணங்களில் உள்ள ஹேக்கிங் தகவல்களை வெளியிட்டுள்ளது.

விக்கிலீக்ஸ் வால்ட் 7

வால்ட் 7-ல் சி.ஐ.ஏ அமைப்பு பயன்படுத்தக்கூடிய ஹேக்கிங் தொடர்பான பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஐபோன் ,ஆண்ட்ராய்ட் கருவிகள் , ஸ்மார்ட் டிவி மற்றும் விண்டோஸ் கருவிகள் போன்றவற்றுடன் கார்களில் உள்ள புதிய கனெக்டேட் நுட்பங்கள் மற்றும் வெளி நாடுகளின் தகவல்களை சிஐஏ அமைப்பு திருடும் வகையிலான ஹேக்கிங் முறையை உருவாக்கியுள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவிக்கின்றது.

1.  ஆண்ட்ராய்டு , ஐபோன் மற்றும் கணினிகள்

பெருமளவில் பயன்பாட்டில் உள்ள ஆண்ட்ராய்டு மொபைல் கருவிகள் , ஆப்பிள் ஐபோன்கள் , விண்டோஸ் கருவிகள் மற்றும் விண்டோஸ, லினக்ஸ் மற்றும் மேக்ஓஎஸ் கம்ப்யூட்டர் போன்றவற்றை ஹேக் செய்து அவற்றில் உள்ள தகவல்களை திருட முயற்சிப்பதாக விக்கிலீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதுபோன்ற கருவிகளில் உள்ள தகவல்களை பெற அவற்றில் உள்ள மைக்ரோபோன் அல்லது கேமரா போன்றவற்றை இயக்கி பயன்பாட்டாளர்களுக்கு தெரியாமல் தகவல்களை பெற முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. ஐபோன்கள்

மிக சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை பெற்று ஐபோன் கருவிகளுக்கு என பிரத்யேகமான குழு ஒன்றினை உருவாக்கி அதன் வாயிலாக பலதரப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு ஐபோன் சார்ந்த தரவுகளை ஊடுருவ சிஐஏ முயற்சி செய்து வருவதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

3.  வாட்ஸ்ஆப் ,  டெலிகிராம்

வாட்ஸ்ஆப் , டெலிகிராம் , சிக்னல் மற்றும் வீபோ போன்ற மெசேஜ் சேவைகளில் அனுப்படும் தகவல்கள் என்கிரிப்ட் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டிருந்தாலும் , இதில் உள்ள தகவல்களை மிக எளிமையாக சி.ஐ.ஏ அமைப்பு ஹேக் செய்து தகவல்களை திருடுகின்றதாம்.

4. ஸ்மார்ட் டிவி

தற்பொழுது மிக வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகத்தில் இன்றியமையாத ஒன்றாக மாறிவரும் நவீன ஸ்மார்ட் தொலைக்காட்சிகளை ஊடுருவி அதன் வாயிலாக தகவல்களை திருடியுள்ளதாக வீப்பிங் ஏஞ்செல் (Weeping Angel) என்ற பெயரில் ஆவனங்களை வெளியிட்டுள்ளது.

திறமையான மென்பொருள் வல்லுஞர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஊடுருவும் மென்பொருள் சாம்சங் நிறுவனத்தின் F8000 ஸ்மார்ட் தொலைக்காட்சி பெட்டிகளை அனைத்து விடும்பொழுது பயணர்களுக்கு அனைத்து விட்டதாக காட்டி விட்டு அருகாமையில் நடக்கும் உரையாடல்களை பதிவு செய்து கொண்டு தொலைக்காட்சி பெட்டிகளை இயக்கும்பொழுது அந்த தகவல்களை சி.ஐ.ஏ வசம் கொண்டு சேர்கின்றதாம்.

5. வாகனங்கள்

நவீன வாகனங்களில் இடம்பெறுகின்ற கனெக்டேட் கார் தொடர்பான நுட்பங்கள் வாயிலாக கார்களை ஊடுருவி அதன் வாயிலாக தகவல்களை பெறுவது மற்றும் கார்களின் மூலம் விபத்துகளை ஏற்படுத்தி படுகொலை செய்யும் நோக்கிலே சி.ஐ.ஏ அமைப்பு இதனை பயன்படுத்துவதாக தெரிவிக்கின்றது.

6. வெளிநாட்டு தகவல்கள்

பல்வேறு வெளிநாடுகளின் அரசின் செயல்பாடுகள் , முக்கிய விபரங்கள் போன்ற தகவல்களை ஊடுருவும் நோக்கில் செயல்படும் வகையில் அதற்கு உண்டான பல்வேறு திறன்களை மென்பொருள்களை உருவாக்கி விண்டோஸ், மேக்ஓஎஸ் போன்ற சாதங்க்களின் வாயிலாக பெறும் வகையில் சி.ஐ.ஏ செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள 8000 பக்கங்களுக்கு மேல் கொண் ஆவனங்களில் இது முதல் பகுதியாகும். மேலும் பல செய்திகள் விரைவில் வெளியாகும்.. இணைந்திருங்கள்…