மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 அப்டேட் இலவசமாக செய்து கொள்ளும் வாய்ப்பு வருகின்ற ஜூலை 29 , 2016 வரை மட்டுமே கிடைக்கும் . அதன் பிறகு நீங்கள் கட்டணம் செலுத்தியே விண்டோஸ் 10 இயங்குதளத்தை பெற இயலும்.

வருகின்ற ஜூலை 29 ,2016 க்குள் அப்டேட் செய்யும் வின்டோஸ் 7 மற்றும் வின்டோஸ் 8 வாடிக்கையாளர்கள் இலவசமாக பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் கணினி அல்லது மடிக்கணினிகளில் விரைவாக விண்டோஸ் 10 அப்டேட்க்கு தயாராகுங்கள்.

விண்டோஸ் 10 அப்டேட் செய்வது எவ்வாறு ?

விண்டோஸ் 10 இயங்க தேவைபடும் அமைப்பு 1GHz CPU, 1GB (32-bit) or 2GB of RAM (64-bit), 16GB (32-bit) or 20GB ஹார்ட் டிரைவ் ஸ்பேஸ் ஆகும்.

விண்டோஸ் 7 , 8 மற்றும் 8.1 பயணர்கள் நேரடியாக விண்டோஸ் இணையதளத்துக்கு சென்றும் அப்கிரேட் செய்யலாம் இணைய முகவரி ; windows 10 
அல்லது

விண்டோஸ் 7 பயணர்கள் Start > Control Panel > System and Security > Windows Update செக்கப் செய்து பின்னர் விண்டோஸ் 10 அப்கிரேட் செய்யலாம்.

விண்டோஸ் 8 அல்லது 8.1 பயணர்கள் Start > PC Settings > Update and recovery > Windows Update அப்கிரேட் செய்யலாம்.

மேலும் விண்டோஸ் 10 அப்கிரேட் பைலை பெற்று அதன் வழிமுறைகளை பெற்று அப்கிரேட் செய்யலாம் ; விண்டோஸ் 10 அப்கிரேட் முகவரி ; விண்டோஸ் 10
எனது அனுபவம்
விண்டோஸ் 7 இயங்குதளத்தில் இருந்து விண்டோஸ் 10க்கு கடந்த வாரத்தில் மேம்படுத்தினேன். விண்டோஸ் அப்கிரேட் பைலை டவுன்லோட் செய்து அப்கிரேட் செய்தேன்..
விண்டோஸ் 10 அப்கிரேட் ஆக இணைய வேகத்துக்கு ஏற்ப எடுத்துகொண்டாலும் குறைந்தபட்சம் 4 மணி நேரங்கள் ஆகியது. மொத்தம் 4.5ஜிபி டேட்டா காலி ஆகியுள்ளது.
லைட் வெயிட் போல மிக இலகுவாக இயங்குகின்றது. விண்டோஸ் 8 போல அல்லாமல் விண்டோஸ் 7 போலவே சிறப்பாக விண்டோஸ் 10 உள்ளது. அப்கிரேட் செய்த பின்னர் சில மாற்றங்களை செய்ய வேண்டியிருந்தது,. அவைகளை தொடர்ச்சியாக தெரிந்துகொள்ளலாம்.
விண்டோஸ் 10 அப்கிரேட் பிரச்சனைகளை எதிர்கொண்டால் மற்றும் விண்டோஸ் 10 பிரச்சனைக்கான தீர்வு மற்றும் கேள்விகளை கமெண்ட் பாக்சில் பதிவு பன்னுங்க…
விண்டோஸ் 10 அப்கிரேட் இலவசம் கடைசி தேதி ஜூலை 29,2016 என்பதனால் இன்றே தொடங்கிவிடுங்கள்… தற்பொழுது 300 மில்லியனுக்கு மேற்பட்ட கருவிகள் விண்டோஸ் 10க்கு மாறியுள்ளது.

விண்டோஸ் 10 இயங்குதளத்தை இலவசமாக பெற தவறினால் இனி ரூ.8110 விலையில் பெறவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவீர்கள்….