மைக்ரோசாஃப்ட் நிறுவனம் புதிதாக விண்டோஸ் 10 S என்ற பெயரில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான இயங்குதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த இயங்குதளம் பெற்ற லேப்டாப்கள் விரைவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

கல்வித்துறையினருக்கு விண்டோஸ் 10 S இயங்குதளம் அறிமுகம்

விண்டோஸ் 10 S

  • மிக குறைந்த விலையில் விண்டோஸ் 10 எஸ் இயங்குதளத்தில் செயல்படும் லேப்டாப்கள் விற்பனைக்கு கிடைக்கும்.
  • இந்த மடிக்கனிணி ஆரம்ப விலை ரூ.12,200 விலையில் தொடங்கலாம்.
  • சாம்சங் , ஏஸர் , டெல் ,ஹெச்பி, டோசிபா போன்ற நிறுவறங்கள் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

கல்வித்துறையினருக்கு விண்டோஸ் 10 S இயங்குதளம் அறிமுகம்

விண்டோஸ் 10 S இயங்குதளம் என்றால் என்ன ?

விண்டோஸ் 10 ப்ரோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட விண்டோஸ் 10 எஸ் இயங்குதளத்தில் நோக்கம் கல்வித்துறை சார்ந்த செயல்பாடுகளை முன்னிறுத்தி வடிவமைக்கபட்டுள்ளது. இந்த இயங்குதளத்தில் மற்றொரு அம்சமாக எந்தவொரு சாஃப்ட்வேர் இன்ஸ்டால் செய்ய வேண்டுமெனிலும் விண்டோசு ஸ்டோரில் இருந்து மட்டுமே தரவிறக்கி இன்ஸ்டால் செய்ய இயலும், வேறு எங்கிருந்து தரவறிக்கினாலும் பயன்படுத்த இயலாது.

இந்த இயங்குதளம் வின்டோசு 10 தளத்தை விட மிக வேகமாக மற்றும் இலகுவாக இயங்கும் வகையிலான பதிப்பாகும். இது க்ரோம் ஓஎஸ் தளத்துக்கு மிகுந்த சவாலை ஏற்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

இதில் மைக்ரோசாஃப்ட 365 ஆஃபீஸ் உள்பட கல்வி சார்ந்த செயல்பாடுகளுக்கு ஏற்ற மென்பொருட்களை இலவசமாக வழங்கி உள்ளது. இதில் அடிப்படை பிரவுசராக மைக்ரோசாப்ட் எட்ஜ் வழங்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்கள் யார் ? 

சாம்சங் , ஏஸர் , டெல் ,ஹெச்பி, டோசிபா மற்றும் ஃபுஜிட்சு போன்ற தயாரிப்பாளர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இனைந்து10 எஸ் பதிப்பு கொண்ட லேப்டாப்களை விற்பனை செய்ய உள்ளனர்.

மேலும் வின்டோசு 10 எஸ் தளத்திலிருந்து வின்டோசு 10 ப்ரோ இயங்கதளமாக மாற்ற மாணவர்கள் இலவசமாகவும் மற்றவர்கள் $49 கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் 10 S இயங்குதளத்தில்  செயல்படுகின்ற லேப்டாப் விலை $189 (ரூ.12120) என்ற விலையில் தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களுக்குள் கிடைக்கும்.இந்த இயங்குதளம் க்ரோம் ஓஎஸ் தளத்துக்கு மிகுந்த சவாலாக விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சர்ஃபேஸ் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here