ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் உலகின் விலை குறைந்த ஃபிரீடம் 251 ஸ்மார்ட்போன் வருகின்ற ஜூன் 30 முதல் டெலிவரி தொடங்கப்பட உள்ள நிலையில் இதுவரை 2 லட்சம் மொபைல்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை குறைந்த 32 இன்ச் HD எல்இடி டிவி வருகை ? - ஃபிரீடம் 251

பிப்ரவரி மாதம் ஃபிரீடம் 251 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட பொழுது 25 லட்சம் மொபைல்போன்கள் ஜூன் 30ந் தேதிக்குள் டெலிவரிசெய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல விதமான தடங்களில் காரணமாக இதுவரை டெலிவரி தொடங்கப்படாமலே உள்ளது.

4 இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளேவுடன் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸருடன் இணைந்த 1ஜிபி ரேம் பெற்றுள்ளது. 8ஜிபி வரையிலான இன்ட்ரனல் மெம்மரியுடன் 32 ஜிபி வரையில் கூடுதலாக மைக்ரோஎஸ்டி கார்டினை பயன்படுத்தி பெற்றுக்கொள்ள இயலும்.

ஃபிரீடம் 251 மொபைல் போனில் 3,2 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா மற்றும் 0.3 மெகாபிக்ஸல் ரியர் கேமராவினை பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளத்தில் செயல்படும் மொபைல்போனில் 3ஜி தொடர்பினை பெறலாம்.

Screen Guards Under Rs.199

ரிங்கிங் பெல்ஸ் நிர்வாக இயக்குநர்  திரு.மொகித் கோயல் ஐஏஎன்எஸ் பிரிவுக்கு அளித்துள்ள பேட்டியில் ஃபிரீடம் 251 மொபைலுக்கு கடுமையான வரவேற்பினை பெற்று மூன்று தினங்களில் 7 கோடிக்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளது. மேலும் தற்பொழுது ஃபிரீடம் 251 மொபைல் தயாரிக்க ஒரு மொபைல் மேல் ரூ.140 முதல் ரூ.150 வரை நஷ்டம் ஏற்பட்டாலும் அதிகப்படியான எண்ணிக்கையில் டெலிவரி கொடுக்கப்படும் பொழுது நஷ்டத்தை ஈடுகட்ட முடியும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் எங்களின் மொபைல்போன் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலே ஹரித்வார் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

விலை குறைந்த 32 இன்ச் HD எல்இடி டிவி வருகை ? - ஃபிரீடம் 251

பெரும்பாலான நுட்ப வல்லுஞர்கள் ரூ.2000க்கு குறைவாக ஸ்மார்ட்போன் தயாரிக்க இயலாது என ஒருபுறம் கூறி வந்தாலும்… அடுத்த கட்ட நகர்வுகளுக்கு ரிங்கிங் பெல்ஸ் தயாராகி விட்டது … என்னவென்றால்.

32 இன்ச் அகலம் கொண்ட ஹெச்டி எல்இடி டிவிகளை வருகின்ற ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் விற்பனை ஆன்லைன் வழியாக அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

ரூ.13,000 விலையில் தொடங்கும் 32 இன்ச் ஹெச்டி எல்இடி டிவிகளின் விலையை குறைந்தபட்சமாக ரூ.10,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்பொழுது 1 லட்சம் டிவிகள் வரை ஸ்டாக் உள்ளதால் முன்பதிவு செய்த உடன் டெலிவரி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபிரீடம் என்ற பெயரிலே இந்த எல்இடி டிவி அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி உங்கள் கருத்து என்ன மறக்காமா கமெண்ட்ஸ் பன்னுங்க…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here