ஆபாச படங்கள் பார்க்கலாமா ? கூடாதா ? – குழப்பத்துக்கு தீர்வு

Ads

பார்ன் (அ) பார்னோகிராஃபி எனப்படும் ஆபாச தன்மை கொண்டவைகள் விஷத்தை விட கொடியது என நிருபிக்கும் டாப் 10 காரணிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.  பார்ன் நல்லதா  ? கெட்டதா ? எனபதை விட மனித மனதில் ஏற்படுத்தும் அழுத்தங்களின் வாயிலாக வாழ்வை பாழ்படுத்தும்.

பாலுணர்வு சார்ந்த விடயங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது வாழ்க்கையின் பல தவறுகளை கட்டுப்படுத்தும் நம் குடும்ப உறவுகளை வளப்படுத்தும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை தானே..!

பார்ன்

1. செயற்கை உலகுடன் உணர்வுபூர்வமான உறவு

நம்முடைய இந்திய கலாசாரத்தில் குடும்பம் , உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போன்ற உறவுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்ற நிலையில் குடும்பம் சார்ந்த உண்மையான பந்தத்தை கொண்டுள்ளது. ஆனால் ஆபாச படங்களுக்கு அடிமையானவர்களின் மனதில் தவறான எண்ணங்களுடன் செயற்கையான உலகத்தினை உருவாக்கி கொள்வதனால் குடும்பத்தை விட்டு விலகி நிற்பார்கள்.

2. நெருக்கம் இல்லாத உறவு

உடலைச் சார்ந்த விடயங்களில் உறவிருந்தாலும் உணர்வுரீதியாக இல்லாமல் காமம் மட்டுமே குறிக்கோளாக மாறி அந்த எண்ண வேட்கைக்கு தள்ளப்படுவார்கள். இதனால் அவர்களுக்கு முழுமையான தீர்வினை உறவு தராது. எனவே  அன்புடன் கூடிய நெருக்கமான உறவு வாழ்வை வளமாக்கும்.

3. பந்தமற்ற வாழ்வு

தவறான ஆபாச படங்களை அதிகம் பார்பதனால் அதை நிஜமாக கருதி நம் வாழ்வில் பல தவறான எண்ணங்கள் , தாழ்வு மனப்பான்மை மற்றும் தனிமை போன்றவை அதிகம் ஏற்படும் என்பதனால் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பருகளுடன் உள்ள நெருக்கமான பந்தம் பாதிக்கும். இது தொடருமானல் வாழ்வின் பெரும்பகுதியை இழப்பீர்கள்.

4.  பார்ன் போதையா ?

பார்னோகிராபி போதையல்ல என சமீபத்தில் வெளியான ஆய்வில் நிருபிக்கப்பட்டாலும் ஆபாச படங்களை பார்த்து பழகியவர்கள் அதனை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பது உண்மை  தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அது போதையா இல்லையா என்பதனை தாண்டி ஆபாசம் ஆபத்துதான் என்பது உண்மையே.. எனவே தவிர்ப்பது நல்லது.

5.  சில நிமிடங்கள்

உடல் சார்ந்த உறவு என்பது கணவன் மனைவிக்குள் ஏற்படும் சிறிய அளவிலான பிரிவுகளுக்கான உறவு பாலமாகவும் ,சந்ததியை வளர்க்கும் ஓர் உறவு பாலம் என்பதனை கடந்த அதன் தன்மைகளை மறந்து தவறான பார்னோகிராஃபி வாயிலாக நேர்வது குடும்ப பிரிவே ஆகும்.

6. ஏமாற்றமே மிஞ்சும்

பார்ன் என்பது தொழில்முறை ரீதியாக செயல்படும் மிகப்பெரிய நிறுவனங்களை போன்ற அமைப்பாகும். அவற்றில் ( சினிமாவில் வரும் அதிரடியான சண்டை காட்சிகள் போல ) பார்க்கும் படங்களை நிஜ வாழ்வில் மையப்படுத்த நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும் குடும்பம் உறவு பிரிவைத்தான் சந்திக்கும்.

7. எப்பொழுதும் தேவை

தனிமையில் இருக்கும் நேரங்களில் குரங்கினை போன்ற தாவும் மனதின் தூண்டுதலால் பார்க்கும் சில தடவைகள் தொடராமல் தடுக்க தவறினால் நம் தனிமையை ஆக்கிரமிக்க தொடங்கும் ஆபாசம் நம் வாழ்வின் பெரும்பகுதியை தனிமை ஆக்கி நம் நெருக்கமான உறவுகளை விலக்கி வைத்து தனிமையை தான் தேடுவோம். எனவே மனதின் சில நிமிட சபலத்தால் பல நிமிட வாழ்வினை இழந்து எப்பொழுதும் தேவை என்கின்ற எண்ணத்தை விதைத்து விடும்.

8. நிறைவற்ற தன்மை

அதிகப்படியான பாலுணர்வு கிளர்ச்சியம் சார்ந்த விடயங்களை கானும்பொழுதும் , ஆர்வம் காட்டும்பொழுது நம்முடைய மூளையின் செயல்பாடு முழுமையாக பார்ன் தன்மை கொண்டவற்றில் ஆர்வம் கொள்வதனால் நம்முடைய தொழில் மற்றும் குடும்ப சார்ந்த உறவுகளில் முழுமையான ஈடுபாட்டினை செலுத்த முடியாமல் நிறைவற்ற தன்மையால் தவிர்ப்பது உண்மையே..

9. கட்டுப்பாடு இல்லாமல்

வேடிக்கை , பொழுதுபோக்கு , ரிலாக்ஸ் என தெடங்கும் பார்ன் மெல்லமாக விதை ஊன்றி மிகப்பெரிய விருட்சமாக உங்களுக்கே தெரியாமல் வளர்ந்து விடும் என்பதனால் உங்கள் மனதினை கட்டுப்படுத்த முடியாமல் , தவிர்க்க வேண்டும் என நினைத்தாலும் தவிர்க்க முடியாமல் தினசரி பணியாக மாறி வாழ்வின் பொன்னான நிமிடங்களை இழக்க நேரிடும்.

10. மழுங்கிய கத்தியாக மனம்

சிறிய அளவில் தொடங்கிய ஆபாசம் சார்ந்த விடயங்களால் மனதின் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கும் ஆபாசம் நாளடைவில் நம்முடைய மனதினை மழுங்கிய கத்தி போல ஆக்கிவிடும் என்பதனால் வாழ்வியலில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும்.

புதிய மொபைல் வாங்குவதில் குழப்பமா உங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு வழங்க – தமிழ் டெக் டாக்கீஸ் பாருங்க.. உங்கள் கேள்வியை பதிவு செய்யுங்க

Comments

comments