ஏடிஎம் மற்றும் வங்கிகளில் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்த காலகட்டத்தில் வீட்டுக்கே கொண்டு ரூ. 2000 பணம் டெலிவரி செய்யும் வகையிலான திட்டத்தை ஸ்நாப்டீல் அறிமுகம் செய்துள்ளது.

வீடு தேடி வரும் ரூ. 2000 பணம் - ஸ்நாப்டீல்

முதற்கட்டமாக இந்த பெங்களூரு மற்றும் குருகிராம் நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள [email protected] திட்டத்தில் ரூ.1 மட்டும் கட்டணமாக ப்ரீசார்ஜ் வழியாக செலுத்திவிட்டால் மறுநாள் உங்கள் இல்லம் தேடி பணத்தை கொண்டு வந்து தருவர்கள்.இதற்கு பொருட்கள் வாங்க வேண்டிய அவசியமில்லை.

ஸ்நாப்டீல் வழியாக பணத்தை பெற உங்கள் மொபைலில் ஸ்நாப்டீல் ஆப் கட்டாயம் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் இணையத்தை பயன்படுத்தும் பொழுது உங்கள் இருப்பிடத்தை பொருத்து அறிவிப்பு வெளியாகும்.அதனை க்ளிக் செய்து அதற்கு உண்டான வழிமுறைகளை தேர்வு செய்யும் பொழுது வீடு தேடி ரூ.2000 பணம் வரும். உங்கள் ஏடிஎம் கார்டை ஸ்வைப் செய்து பணத்தை தந்துவிடுவார்கள்.

இதுபோன்ற சேவையை புனே நகரில் உள்ள டெயில்மில்ஸ் மற்றும் க்ரோஃபெர்ஸ் போன்ற நிறுவனங்களும் வழங்கி வருவது குறிப்பிடதக்கதாகும். இது ஏடிஎம் மற்றும் வங்கிகளில் மணிகணக்கில் காத்துகிடப்பவர்களுக்கு நல்லதொரு வரப்பிரசாதமாக அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here