வைபர் மெசேஜ் செயலில் புதிய வசதிகளாக GIF படங்கள் , வெஸ்டர்ன் யூனியன் பணம் அனுப்பும் வசதி அனைத்து ஆப்ஸ்களிலும் ஐஓஎஸ் பயணர்களுக்கு ஆப்பிள் ஓஎஸ் வாட்ச்யுடன் இனைந்து செயல்படும் வசதியை பெறலாம்.

வைபர் மெசேஜ் செயலில் புதிய வசதிகள் அறிமுகம்

வாட்ஸ் ஆப் செயலிக்கு மிக கடுமையான சவாலினை ஏற்படுத்தி வரும் வைபர் மெசேஜ் செயிலில் தற்பொழுது GIF படங்கள் , வெஸ்டர்ன் யூனியன் வழியாக பணம் அனுப்பும் வசதி , பேக்கப் மற்றும் ரீஸ்டோர் போன்றவற்றுடன் ஆப்பிள் பயனர்களுக்கான ஆப்பிள் வாட்ச் ஓஎஸ் ஸ்மார்ட் வாட்ச்யில் செயல்படும் வசதிகளை பெற்றுள்ளது.

கூல்பேட் நோட் 3 லைட் மொபைல் வாங்க ;  Coolpad Note 3 Liteவைபர் மெசேஜ் செயலில் புதிய வசதிகள் அறிமுகம்

வைபர் மெசேஜ் செயலில் புதிய வசதிகள்

1. அனிமேஷன் அடிப்படையிலான GIF என்று அழைக்கப்படும் படங்களை அனுப்பவதுடன் எழுத்து செய்திகளை இணைத்து அனுப்ப இயலும்.

2, டெக்ஸ்ட் மெசேஜ்  தகவல்களை பேக்அப் செய்து வைக்கவும் திரும்ப  அதே மொபைல் எண் வாயிலாக ரீஸ்டோர் செய்து கொள்ளலாம்.இதற்கு கூகுள் டிரைவ் அல்லது ஐகிளவுட் வசதியை பயன்படுத்த வேண்டும்.

3. வெஸ்டர்ன் யூனியன் டிரான்ஸ்ஃபர் வாயிலாக பணத்தினை இலகுவாக அனுப்ப இயலும். பணத்தை வெர்ஸ்டன் யூனியன் ஏஜென்ட்  வழியாக பெறும் வகையிலோ அல்லது வங்கி கணக்கு வழியாக பணத்தை அனுப்பி வைக்கலாம்.  முதற்கட்டமாக 50 நாடுகளில் பணம் அனுப்பும் வசதி செயல்பாட்டுக்கு வருகின்றது.

4. ஆப்பிள் ஓஎஸ் மூலம் இயங்கும் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்சுகளில் அறிவிப்புகள் மற்றும் உடனடி பதில்களை அனுப்ப இயலும்.

வைபர் மெசேஜ் செயலில் புதிய வசதிகள் அறிமுகம்

உலகயளவில் 600 மில்லியன் மக்களுக்கு மேல் பயன்படுத்தும் செயலியாக வைபர் விளங்குகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here