2ஜி மொபைலுக்கு ஏற்ற ஸ்கைப் லைட் ஆப் அறிமுகம்

Ads

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 2ஜி நெட்வொர்க் சேவையிலும் சிறப்பாக செயல்படும் வகையிலான  ஸ்கைப் லைட் செயலியை Future Decoded அரங்கில் அறிமுகம்  செய்துள்ளது. ஸ்கைப் லைட்டில் மிக வேகமாக துல்லியமாகவும் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

ஸ்கைப் லைட் ஆப்

மிக குறைவான வேகத்தில் செயல்படும் 2ஜி இணைய இணைப்பிற்கு ஏற்ற ஆப்சாக வந்துள்ள ஸ்கைப் லைட்டில் உள்ள சிறப்பு அம்சங்கள் மற்றும் எவ்வாறு பயன்படுத்துவது போன்ற விபரங்களை அறிந்துகொள்ளலாம் வாருங்கள்..

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 2ஜி இணைய சேவையே அதிகளவில் பயன்பாட்டில் உள்ளதால் அவற்றுக்கு ஈடுகொடுக்கும் வகையிலான இலகு ஆப்ஸ் 2ஜிபி முதல் 8ஜிபி வரையிலான இன்டர்னல் மெம்மரி கொண்ட மொபைலுக்கு ஏற்றதாக அமைந்திருக்கும்.

13MB தரவு கொண்ட ஸ்கைப் ஆப்  கூகுள் பிளே ஸ்டோரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆப்சினை தரவிறக்க பின்னர் உங்கள் கணக்கினை உருவாக்கி பின்னர் ஆதார் எண் வாயிலாக உங்கள் கணக்கினை சரிபார்த்தல் அமைப்பினை கொண்ட பாதுகாப்பு அம்சத்தை கொண்டதாக ஸ்கைப் லைட் வந்துள்ளது.

உயர்தர ஹெச்டி அழைப்புகளை குறைவான இணைய வேகத்திலே வழங்கும் நோக்கிலே லைட் ஆப் வந்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள பாட்ஸ் , உடனடி மெசேஜ் சேவை போன்றவற்றை விரைவாக பயன்படுத்தலாம். இதில் GIF படங்களை அனுப்ப இயலாது.

தமிழ் உள்பட 7 இந்திய மொழிகளில் ஸ்கைப் லைட் ஆப் கிடைக்கின்றது. அவை தமிழ் ,  தெலுங்கு , குஜராத்தி , மலையாளம் , பெங்காலி , உருது மற்றும் ஹிந்தி ஆகும்.

 

Comments

comments