இந்தியர்கள் மனதை புண்படுத்திய ஸ்னாப்சாட் ஆப் பற்றி நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சுவாரஸ்ய தகவல்களை இங்கே காணலாம்.

70 % பெண்கள் விரும்பும் ஸ்னாப்சாட் பற்றி ஒரு சுவாரஸ்ய தொகுப்பு

ஸ்னாப்சாட் ஆப்

இது ஒரு பணக்கார ஆப், இந்தியா மற்றும் ஸ்பெயின் போன்ற ஏழை நாடுகள் எங்களுக்கு தேவையில்லை என கூறியதாக ஸ்னாப்சாட் சிஇஓ ஈவான் ஸ்பீகல் மீது எழுந்த புகாரை தொடர்ந்து இந்திய மக்கள் ஸ்னாப்சாட் செயலிக்கு ஒரு ஸ்டார் ரேட்டிங் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் ஸ்னாப்சாட் ஆப் பற்றி சில சுவாரஸ்ய தகவல்களை காணலாம்.

70 % பெண்கள் விரும்பும் ஸ்னாப்சாட் பற்றி ஒரு சுவாரஸ்ய தொகுப்பு

  • 34 முறை பல்வேறு புராஜெக்ட்களில் தோல்வி அடைந்த பின்னரே இவான் ஸ்பைகெல்லுடன் ரெக்கி பிரவுன் போஸ்டர் மற்றும் பாபி மர்பி ஆகிய மூவரின் கூட்டணியில் உருவாக்கப்பட்ட செயலியாகும்
  • 2011 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்னாப்சாட் செயலின் முதல் பெயர் பிகாபூ (Picaboo) ஆகும்.
  • படங்கள் மற்றும் வீடியோவை பகிர்ந்து கொள்ள பல்வேறு விதமான ஃபில்டர்களை கொண்ட ஆப் ஆகும்.
  • 2012 ஆம் வருடத்தில் சினாப்சாட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • ஸ்னாப்சாட் செயிலில் அமைந்துள்ள லோகோ Ghostface chillah எனப்படுகின்றது. அதாவது சிலர் இதனை ஆவிகளை படம்பிடிக்கும் ஆப் என நம்புகின்றனர்.
  • உலகயளவில் மிக பிரபலமாக உள்ள ஸ்னாப்சாட் பயன்படுத்துபவர்களில் 70 சதவீதம் பெண்கள் என்பதே உண்மை.
  • மொத்த பயன்பாட்டில் 30 சதவீத பயனர்கள் ஆப்பிள் ஐஓஎஸ் பயன்படுத்துபவர்களாகும்.
  • இந்த செயலியை சராசரியாக பயன்படுத்துபவர்களின் வயது 13 முதல் 25 மட்டுமே..
  • 2016 ஆம் ஆண்டு முடிவின்படி தினமும் 7 பில்லியன் ஸ்னாப் படங்கள் மற்றும் வீடியோக்கள் சினாப்சாட் செயலில் பதிவு செய்யப்படுகின்றதாம்.
  • பல்வேறு அம்சங்களை கொண்டுள்ள இந்த செயலில் உள்ள டிரிங்க்ஸ் வசதியை 60 சதவித பயனர்கள் பயன்படுத்துகின்றனராம்.

மிக வேகமாக சந்தையில் வளர்ந்து வருகின்ற ஸ்னாப்சாட் செயலியை பேஸ்புக் நிறுவனர் 2013 ஆம் ஆண்டில் 1 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்த நிலையில் இதனை ஸ்னாப் சேட் சிஇஓ ஸ்பிக்கல் திட்டவட்டமாக நிராகரித்து விட்டார்.

சர்ச்சையில் சிக்கிய ஸ்னாப்சாட் செயில் ஆப்பிள் ஸ்டோரில் ஒரு ஸ்டார் ரேட்டிங் என சரிந்துள்ளது. சிலர் ஸ்னாப்டீல் (Snapdeal) என நினைத்து இதன் ரேட்டிங்கை சரித்துவிட்டனர்.

70 % பெண்கள் விரும்பும் ஸ்னாப்சாட் பற்றி ஒரு சுவாரஸ்ய தொகுப்பு

70 % பெண்கள் விரும்பும் ஸ்னாப்சாட் பற்றி ஒரு சுவாரஸ்ய தொகுப்பு

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஸ்பிக்கல் குறைந்த இணைய வேகம் உள்ள நாடுகளை தவிர்க்கலாம் என்றே கூறியதாக தெரிவித்துள்ளார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here