பேட்டர்ன் லாக் மற்றும் பின் நம்பர் லாக் போன்ற அடிப்படையான லாக்கினை விநாடிகளில் அன்லாக் செய்ய தெர்மல் கேமரா எனப்படும் வெப்ப உணரி கேமராக்களை பயன்படுத்தி ஹேக்கிங் செய்து விடுவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

தெர்மல் கேமரா ஹேக்கிங்

  • பின் கோடு அல்லது பேட்டர்ன் லாக் அன்லாக் செய்யும்பொழுது கைகளில் உள்ள வெப்பம் மொபைல் திரைகளுக்கு சென்றடைகின்றது.
  • ஹைக்கர்கள் இந்த வெப்பத்தை தெர்மல் கேமரா உதவியுடன் உங்கள் மொபைலை ஸ்கீரின்ஷாட் எடுத்து விடுகின்றனர்.
  • ஹீட் மேப் வரைபடத்தை கொண்டு உங்களுடைய பின் அல்லது பேட்டர்ன் லாக் கண்டுபிடித்து விடுகின்றனர்.
  • இந்த வெப்பம் 30 விநாடிகள் மட்டுமே ஸ்மார்ட்போன் திரையில் நீடிக்குமாம்.

ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டூட்கர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் வெளியாகியுள்ள இந்த தகவல் ஆண்ட்ராய்டு சார்ந்த ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான பயனர்கள் பயன்படுத்தும் இந்த இருவகை லாக் முறையில் மொபைல்களை அன்லாக் செய்து மொபைல்களில் உள்ள தொடர்புகள், புகைப்படம் , வங்கி கணக்கு தகவல் , மின்னஞ்சல் போன்ற பலதரப்பட்ட தகவல்களை திருடிவிடுகின்றனர் என எச்சரித்துள்ளனர்.

19 டிகிரி செல்சியஸ் (66F) மற்றும் 32 டிகிரி செல்சியஸ் (90F) வெப்பநிலையில் படங்களை பிடிக்கும் வகையிலான தெர்மல் கேமரா வினை கொண்டு ஸ்கீரின்ஷாட் செய்து பின்புலத்தில் எந்தவொரு படமும் இல்லாதவாறு கிரேஸ்கேல் படமாக பிடித்து விரல்கள் பதிவு செய்யப்பட்ட தன்மையை கொண்டு உங்கள் பேட்டர்ன் மற்றும் பின் தகவல்களை திருடிவிடுகின்றனராம்.

மொபைலில் அன்லாக செய்த 15 விநாடிகளில் தகவலை ஸ்கீரின்ஷாட் செய்து விடுகின்றனராம்.அவ்வாறு செய்யப்பட்ட தகவலின் அடிப்படையில் 100 சதவீதம் பேட்டர்ன் அல்லது பின் லாக் கண்டுபிடித்து விடுகின்றனராம்.

படங்கள் உதவி – University of Stuttgart