இன்று முதல் ஃபிளிப்கார்ட் வாயிலாக விற்பனை செய்யப்பட ஸ்வைப் எலைட் சென்ஸ் ஸ்மார்ட்போன் விலை ரூ.7499 ஆகும். 5 அங்குல முழு ஹெச்டி திரையுடன் 3ஜிபி ரேம் பெற்று விளங்குகின்றது.

ஸ்வைப் எலைட் சென்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஸ்வைப் எலைட் சென்ஸ்

டூயல் சிம் ஆதரவு கொண்ட எலைட் சென்ஸ் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ மூலம் இயங்குகிறது. எலைட் சென்ஸ் கருவியில் 720*1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் எச்டி திரையை பெற்றுள்ளது. 1.4GHz  குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 ப்ராசசர் மூலம் செயல்படுகின்ற  3ஜிபி ரேம் பெற்றுள்ளது.

32ஜிபி இன்டர்னல் சேமிப்பு திறனுடன் கூடுதலான சேமிப்புக்கு மைக்ரோSD அட்டை வழியாக 64ஜிபி வரை அதிகரிக்க இயலும். இந்த கருவியில் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்ஃபீ கேமரா பெற்றுள்ளது.

சிறப்பான பேட்டரி திறனை கொணுடிருக்கும் வகையில் 2500mAh பெற்றுள்ளது. ஸ்வைப் எலைட் சென்ஸ் மொபைலில் கூடுதல் வசதிகளாக  Wi-Fi, ஜிபிஎஸ், ப்ளூடூத், 3.5மிமீ ஆடியோ ஜாக், FM ரேடியோ. ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி எல்டிஇ , VoLTE மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here