ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் 6X ஸ்மார்ட்போன் விற்பனைக்கு ரூ.12,999 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. மார்ஷ்மெல்லோ 6.0 இயங்குதளத்தில் 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் ஆப்ஷன்களை பெற்ற மாடலாக வந்துள்ளது.

ஹானர் 6X மொபைல் விலை விபரம் , நுட்ப விபரங்கள்

ஹூவாய் ஹானர் 6எக்ஸ்

ஹானர் 6 எக்ஸ் ஸ்மார்ட்போனில் 5.5 அங்குல ஹெச்டி திரையுடன் 2.5D கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. 4 X 2.1GHz + 4 X 1.7GHz உடன் ஹூவாயின் கீரா 655 ஆக்டோ கோர் சிப்-செட் உடன் இணைந்த  3  ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் என இரு மாறுபட்ட வேரியன்டில் கிடைக்கின்றது.

3ஜிபி ரேம் மாடலில்  32 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் மாடலில் 64 ஜிபி என இருவிதமான இன்டரனல் மெம்மரி ஆப்ஷனுடன்  வந்துள்ளது. கூடுதலாக 128ஜிபி வரையிலான மெம்மரியை அதிகரிக்க மைக்ரோ எஸ்டி கார்டினை பெற்றுள்ளது.

பின்புறத்தில் 12 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் என இரு கேமரா ஆப்ஷன்களுடன் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது.

ஹானர் 6எக்ஸ் விலை

  • ரூ. 12,999 – 3GB RAM/32GB
  •  ரூ. 15,999 – 4GB RAM/64GB

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here