சீனாவின் சியோமி நிறுவனத்தின் ரெட்மி ஸ்மார்ட்போன்கள் உலக அளவில் 110 மில்லியன் மொபைல்களை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சியோமி உறுதி செய்துள்ளது.

கடந்த 2013 ஆம் வருடத்தில் இருந்து விற்பனையில் உள்ள ரெட்மி ஸ்மார்ட்போன்கள் வரிசையின் விற்பனையில் மிக முக்கிய பங்காற்றி வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

சியோமி நிறுவனத்தின் சர்வதேச தலைமை அதிகாரி ஹூகோ பாரா கூறுகையில் கடந்த ஆகஸ்ட் 2013 முதல் உலகரங்கில் விற்பனையில் உள்ள ரெட்மி மொபைல்கள் விநாடிக்கு 1.21 மொபைல்கள் என்ற எண்ணிக்கையில் விற்பனை செய்துள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ரெட்மி மொபைல் பயன்படுத்துபவர்களின் சராசரி வயது 22 முதல் 29 வயது வரையில் உள்ள இளைய தலைமுறையினரே அதிகம் உள்ளனர். மேலும் இவர்கள் இணையம் மற்றும் ஆப்ஸ் பயன்பாடுகளுக்கு பெரிதும் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி மொபைல் வாடிக்கையாளர்கள் வீடியோ , இணையம் , கேம்ஸ் மற்றும் படிப்பதற்கு அதிகம் பயன்படுத்துகிறார்கள் என உறுதி செய்துள்ளார்.

கடந்த மே மாத முடிவில் இந்தியாவில் 6 லட்சம் ரெட்மி நோட் 3 மொபைல்கள் இரு மாதங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சியோமி நிறுவனத்தின் சர்வதேச சந்தைகளில் சீனாவை தொடர்ந்து இந்தியா முக்கிய சந்தையாக விளங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மட்டுமல்லாமல் ஆஃப்லைன் வழியாக விற்பனை அதிகரிக்கும் நோக்கில் பைலைன் மற்றும் இன்னோகாம் போன்ற ஆஃப்லைன் விநியோகஸ்தர்கள் வாயிலாக சியோமி மொபைல்கள் 5000 கடைகளை நிறுவ திட்டமிட்டுள்ளது.

சியோமி நிறுவனத்தின் மிக பிரபலமான மாடல்கள் ரெட்மி நோட் 3 , ரெட்மி 2 பிரைம் , ரெட்மி நோட் பிரைம் மற்றும் ரெட்மி 2 ஆகும். மேலும் எம்ஐ பிராண்டில் எம்ஐ5 மற்றும் எம்ஐ மேக்ஸ் போன்ற மொபைல்கள் பிரபலமாக உள்ளன. அனைத்து மொபைல்களையும் பார்வையிட ஃபிளிப்கார்ட் படத்தை க்ளிக் பன்னுங்க..

 Buy Intex mobiles