உலகை அச்சுறுத்திய வானாக்ரை ரேன்சம்வேரை உருவாக்கிய 14 வயது சிறுவன்..!

உலகையே சைபர் தாக்குதலால் உலுக்கிய ரேன்சம்வேரான வானாக்ரை போன்றதொரு மென்பொருளை ஜப்பானைச் சேர்ந்த 14 வயது சிறுவன் உருவாக்கிய காரணத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளான.

வானாக்ரை

ஜப்பான் நாட்டின் ஒசாகா பகுதியைச் சேர்ந்த  14 வயது சிறுவன் பிரபலமாக வேண்டுமென்ற நோக்கத்திற்காக தனது சொந்த முயற்சியில் உலகை அச்சுறுத்தி வந்த ரேன்சம்வேரான வானக்ரை போன்றதொரு மால்வேரை தானே பயின்று உருவாக்கிய குற்றத்துக்காக இந்த பள்ளி மாணவன் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளான்.

இந்தச் சிறுவன் உருவாக்கிய மென்பொருளை பிரபலமான இணையதளம் ஒன்றில் பதிவேற்றியதை தொடர்ந்து அதனை 100க்கு மேற்பட்ட நபர்கள் தரவிறக்கியுள்ளதாக தெரிவித்துள்ளான்.

யாருடைய துனையும் இன்றி தனது சொந்த முயற்சியால் WAnnacrypt போன்றே கணினிகளை லாக் செய்து பணம் பறிக்கின்ற வகையில் இவன் உருவாக்கியுள்ளான.

வான்க்ரை தாக்குதலால் 150க்கு மேற்பட்ட நாடுகளில் 3 லட்சத்துக்கு மேற்பட்ட கணினிகள் பாதிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் இங்கிலாந்தின் முன்னணி மருத்துவமனைகள் உள்பட பல்வேறு பெரிய நிறுவனங்களும் சிக்கியது இங்கே குறிப்பிடதக்கதாகும்.

Recommended For You