அமேசானை அலறவைத்த ரூ.50 லட்சம் வரை மோசடிஇந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் இணையதளமான அமேசான் நிறுவனத்தில் 166 மொபைல் போன்களுக்கு ஆர்டர் கொடுத்து ரூ.50 லட்சம் வரை மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆன்-லைன் மோசடி

ஆன் – லைன் மூலமாக பொருட்களை விற்பனை செய்யும், அமேசான் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், டில்லி போலீசார் நடத்திய விசாரணையில், இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. போலி, ‘சிம் கார்டு’ : இதுகுறித்து போலீசார் கூறியதாவது: டில்லியைச் சேர்ந்த, ஓட்டல் மேனேஜ்மென்ட் பட்டதாரியான சிவம் சோப்ரா, 21, வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். அப்போது, மொபைல் போன், ‘சிம்’ கார்டுகளை விற்கும் சுனில் ஜெயின், 38, என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. சுனில் ஜெயினிடம் இருந்து போலியான பெயர், முகவரி கொடுத்து, சிவம் சோப்ரா, ‘சிம்’ வாங்குவார். அதைப் பயன்படுத்தி, ஆன்லைன் நிறுவனமான அமேசானில், விலை உயர்ந்த மொபைல் போனுக்கு ஆர்டர் கொடுப்பார்.நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் முகவரியை கண்டுபிடிக்க முடியாதபோது, அருகில் இருப்பதாகக் கூறி, பார்சலை வாங்கிக் கொள்வார். பார்சலை பிரித்து, மொபைலை எடுத்து விட்டு, தனக்கு வந்த பார்சலில் எதுவுமே இல்லை என்று பொய்யான புகார் கூறி, பணத்தை திரும்பப் பெறுவார். புகார் : இவ்வாறு, 144 போலி சிம் கார்டுகளை பயன்படுத்தி, 166 போன்களுக்கு ஆர்டர் கொடுத்து, நிறுவனத்தை ஏமாற்றி, 50 லட்சம் ரூபாய் வரை இழப்பீடாக பெற்றுள்ளார்.

இவ்வாறு கிடைக்கும் மொபைலை, ஆன் – லைன் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள மார்க்கெட்டிலோ விற்றுவிடுவார்.தொடர்ந்து, தங்கள் மொபைல் போன்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்காததால் சந்தேகம்அடைந்து, அமேசான் நிறுவனம் புகார் கொடுத்தது. விசாரணையில், சிவம் சோப்ரா இந்த மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரையும், அவருக்கு உதவிய சுனில் ஜெயினையும் கைது செய்துள்ளோம். அவர்களிடமிருந்து, 19 மொபைல் போன்கள், 12 லட்சம் ரூபாய் ரொக்கம், 40 வங்கிக் கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

ஒரு ஆண்டில் மட்டும், இவ்வாறு, 50 லட்சம் ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here