2017 சாம்சங் கேலக்சி A5 மற்றும் கேலக்சி A7 ஸ்மார்ட்போன் கருவிகள் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது இரு கருவிகளும் வருகின்ற மார்ச் 15 முதல் முன்பதிவு தொடங்குகின்றது.

2017 சாம்சங் கேலக்சி A5 மற்றும் கேலக்சி A7 விற்பனைக்கு வந்தது

2017 சாம்சங் கேலக்சி ஏ5 மற்றும் கேலக்சி ஏ7

IP68 ரேட்டிங் பெற்றுள்ள இந்த கருவிகள் வாட்டர் ப்ரூஃப் மற்றும் டஸ்ட் சார்ந்த தொல்லஃகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கும்.

டூயல் சிம் ஆதரவு கொண்ட 2017 கேலக்சி ஏ5 மற்றும் ஏ7 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ மூலம் இயங்குகிறது. 1.9GHz  சாம்சங் Exynos 7880 SoC ப்ராசசர் மூலம் செயல்படுகின்ற  3ஜிபி ரேம் பெற்றுள்ளது.
32ஜிபி இன்டர்னல் சேமிப்பு திறனுடன் கூடுதலான சேமிப்புக்கு மைக்ரோSD அட்டை வழியாக 256ஜிபி வரை அதிகரிக்க இயலும். இந்த கருவியில் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமரா f/1.9 அப்ரேசர் உடன் வந்துள்ளது. 16 மெகாபிக்சல் செல்ஃபீ கேமராவும் f/1.9 அப்ரேசரை பெற்றுள்ளது.

கேலக்சி ஏ5 மற்றும் ஏ7 மொபைல்களில் கூடுதல் வசதிகளாக  Wi-Fi, ஜிபிஎஸ், ப்ளூடூத், 3.5மிமீ ஆடியோ ஜாக், FM ரேடியோ. ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி எல்டிஇ , VoLTE மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது.

இரு மாடல்களுக்கும் உள்ள வித்தியாசமே  சாம்சங் கேலக்ஸி A5 (2017)  5.2 அங்குல முழு ஹெச்டி வசதியுடன் 1080×1920 பிக்சல் தீர்மானத்துடன் சூப்பர் AMOLED திரையுடன் 3000mAh பேட்டரியை பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A7 (2017)  5.7 அங்குல முழு ஹெச்டி வசதியுடன் 1080×1920 பிக்சல் தீர்மானத்துடன் சூப்பர் AMOLED திரையுடன் 3600mAh பேட்டரியை பெற்றுள்ளது.

2017 சாம்சங் கேலக்ஸி A  வரிசை விலை
  • 2017 சாம்சங் கேலக்சி A5 விலை ரூ. 28,990
  • 2017 சாம்சங் கேலக்சி A7 விலை ரூ. 33,490

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here