சாம்சங் கேலக்ஸி எஸ்8 அறிமுகம் ஆன சில மாதங்களில் அடுத்த கட்டமாக சாம்சங் கேலக்ஸி S9 செய்திகள் பரவ தொடங்கியுள்ளன. கேலக்ஸி எஸ்9 ஸ்மோர்ட்போன் எஸ்ஒசி 845 சிப்செட் இடம்பெற்றிருக்கும்.

சாம்சங் கேலக்ஸி S9

  • இந்தியாவில் ரூ.57,900 விலையில் சாம்சங் கேலக்ஸி எஸ்8 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • வரவுள்ள கேலக்ஸி எஸ்9 மொபைலில் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் இடம்பெற்றிருக்கும்.
  • ஆப்பிள் ஐபோன்8 மொபைல் வீழ்த்தும் வகையில் களமிறங்கலாம்.

update : 26/05/2017

வரவுள்ள புதிய கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் மாடல்கள் விற்பனையில் உள்ள எஸ்8 போன்ற அடுத்த தலைமுறை AMOLED ஸ்கீரினுடன் கூடிய இன்ஃபினிட்டி டிஸ்பிளேவின் பெற்றதாக விளங்கும். இந்த இருமொபைல்களும் ஸ்டார் மற்றும் ஸ்டார் 2 என குறியீட்டு பெயரில் தயாரிப்பு பணிகளை சாம்சங் மேற் கொண்டு வருகின்றது.

அடுத்த வருடத்தின் தொடக்க மாதங்களில் சந்தைக்கு வரக்கூடிய இந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் உள்ள கேலக்ஸி எஸ்8 சீரிஸ் மாடல்களை விட சிறபானதாக இருக்கும்.

update : 25/04/2017

ஆப்பிள் ஐபோன் 8 இந்த வருட இறுதியில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கின்ற மாடலுக்கு நெருக்கடியாக கேலக்ஸி எஸ் 8 விளங்கினாலும் அடுத்த சவாலையும் விரைவில் அறிமுகப்படுத்தும் நோக்கில் கேலக்ஸி எஸ்9 மாடலை அறிமுகம் செய்வதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளதாக இன்வெஸ்டர் ஆங்கில தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

குவால்காம் மற்றும் சாம்சங் இணைந்து கேலக்ஸி எஸ்9 மொபைலுக்கு மிக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் புதிய ஸ்னாப்டிராகன் சிப்செட் உருவாக்க திட்டமிட்டு வருகின்றதாம்,இதற்கு 7nm கொண்ட ஸ்னாப்டிராகன் 845 SoC என பெயரிடப்படலாம் (system-on-chip- soc) என தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஸ்னாப்டிராகன் 820/821 எஸ்ஒசி போன்றவற்றை 27 சதவீத கூடுதல் பெர்ஃபாமென்ஸ் பெற்ற 835 சிப்செட் வசதியை பெற்றுள்ள கேலக்ஸி எஸ்8 (இந்திய மாடலில் சாம்சங்  Exynos 8895 பிராசஸர் உள்ளது) மாடலுக்கும் மேலாக கூடுதலான பெர்ஃபாமென்ஸ் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்துவதாக இந்த மாடல் விஆர் பிக்ஸ்பி வசதிகளை பெற்றதாக அமையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here