45 மில்லியன் டிவிட்டர் கணக்குளை இயக்குவது மனிதர்கள் அல்ல..!

Ads

சமூக வலைதளங்களில் மிக முக்கியமான டிவிட்டர் வலைதளத்தில் தினசரி 300 மில்லியன் பயனர்கள் உலா வருகின்றனர். இவற்றில் 9 சதவீதம் முதல் 15 சதவீதம் வரையிலான அதாவது  27 மில்லியன் முதல் 45 மில்லியன் கணக்குகளை இயக்குவது மனிதர்கள் அல்ல..பாட்ஸ்..!

டிவிட்டர்

இன்டியானா மற்றும் தென் கலிஃபோரினியா பல்கலைக்கழகங்களின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் முடிவில் வெளியாகியுள்ள இந்த அதிர்ச்சி தகவலினால் டிவிட்டர் வலைதளமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. பெரும்பாலான பாட்ஸ்கள் டிவிட்டர் கணக்கினை முழுமையாக தங்கள் கட்டுபாட்டில் செயல்படுத்தி வருகின்றதாம்.

இவற்றில்சில பாட்ஸ்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்ற நிலையில் பல்வேறு பாட்ஸ்கள் மிக மோசமான கருப்பு பக்கங்களை வெளிப்படுத்துவதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இவற்றில் சில பாட்ஸ்கள் மால்வேர் செயலிகள் , தவறான தகவல்கள் , தீவராவாத நடவடிக்கைகளுக்கு ஆட்கள் சேர்ப்பது போன்றவற்றை செய்கின்றதாம்.

Comments

comments