மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் நம்முடைய பாரம்பரிய பழக்கத்தை மூழ்கடிப்பதில் முதல் கருவியாகவே விளங்குகின்றது. கூகுள் வெளியிட்டுள்ள இயர் இன் செர்ச் ரிபோர்டில் 50 சதவீத இந்தியர்கள் தங்கள் டேட்டிங் துனையை ஆன்லைனில் தேடுகின்றனர் என தெரிவித்துள்ளது.

ஆன்லைனில் துணை தேடும் 50 % இந்தியர்கள் : கூகுள்

இயர் இன் செர்ச்

கூகுளின் Year in Search ரிபோர்டில் வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் திருமணத்திற்கு முன்பே தங்களுக்குப் பிடித்தமான துணையுடன் டேட்டிங் செய்ய ஆண், பெண் இருபாலருமே அதிகம் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேடுதல் உலகின் ஜாம்பவானாக விளங்குகின்ற கூகுள் நிறுவனத்தின் தேடுபொறி , கூகுள் பிளே ஸடோர், யூட்யூப் போன்ற தளங்களில் தேடப்பட்ட மற்றும் அதிகம் ஆர்வம் காட்டும் செயல்களை கொண்டு  எடுக்கப்பட்டுள்ள முடிவுகளில் டேட்டிங் தொடர்பாக 50 சதவீத தேடலும் , அது தொடர்பான செயலிகளை தரவிறக்கம் செய்வது 53 சதவீதமும் அதிகரித்துள்ளதாம்.

ஆன்லைனில் துணை தேடும் 50 % இந்தியர்கள் : கூகுள்
மேலும் திருமணம் தொடர்பான தேடல்களான திருமண பத்திரிக்கை , திட்டமிடல் , புகைப்படகாரர்கள் , திருமண பட்டு முதல் ஆடைகள் போன்றவற்றின் தேடல் 30  சதவீதம் அதிகரித்துள்ளதால் தற்பொழுது 492 கோடி சந்தை மதிப்பினை கொண்டுள்ள ஆன்லைன் மேட்ரிமோனி தளங்களின் மதிப்பு ரூ.1,197 கோடியாக 2020ல் உயரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 ம் வருடத்தை transformational year for India என அழைக்கும் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள மற்றொரு தகவல் உலகயளவில் இணையதளம் இரண்டாவது மிகப்பெரிய நாடாக இந்தியா விளங்குகின்றது.  35 கோடி இணையதளம் பயன்படுத்துபவர்களில் 22 கோடி பயனர்கள் ஸ்மாரட்போன் வாயிலாக இணையத்தை பயன்படுத்துகின்றனராம்.

மேலும் 77% இந்திய பெண்கள் உடைகளையும், 62% பெண்கள் அழகு சாதன பொருட்களை வாங்குவதிலும் 43 %  பெண்கள் அழகு குறிப்புகளை ஆன்லைனில் தேட ஆர்வம் காட்டுகின்றனர். அடுத்தப்படியாக 32 % இணைய பயன்பாட்டாளர்கள் வீடியோ பார்க்க ஆர்வம் காட்டுகின்றனராம்.