வாட்ஸ்அப் நிறுவனத்தை யார் வாங்கியது என்பது கூட தெரியாத பல அமெரிக்க மக்கள்

உலகளவில் பிரபலமான மெசேஜிங் பிளாட்பாரமாக இருந்து வரும் வாட்ஸ்அப் நிறுவனத்தை யார் வாங்கியுள்ளனர் என்று 50 சதவிகித அமெரிக்க மக்களுக்கு தெரியாது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து DcukDuickGo என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், வாட்ஸ்அப் நிறுவனத்தை பேஸ்புக் வாங்கியுள்ளது என்பது 50 சதவிகித அமெரிக்க மக்களுக்கு தெரியாமலே வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.

1,297 வயது வந்த ஆண்களிடம் நடத்தபட்ட இந்த ஆய்வில், பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனத்தை பேஸ்புக் வாங்கியது தெரியாமல் உள்ளது. பெரும்பாலான அமெரிக்க மக்கள் வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தி வரும்நிலையில், இது அவர்களுக்கு தெரியமால் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனத்தை யார் வாங்கியது என்பது கூட தெரியாத பல அமெரிக்க மக்கள்

இதுமட்டுமின்றி பேஸ்புக் நிறுவனத்தின் தகவல் திருட்டு குறித்த விழிப்புணர்வும் பெரும்பாலான அமெரிக்க மக்களிடம் இல்லை என்றும் DuckDuckGo நிறுவனம் நடத்திய மற்றொரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த நிறுவனம் பேஸ்புக் குறித்து நடத்திய ஆய்வில் 56.9 சதவிகித அமெரிக்க வயதுவந்த ஆண்கள் பேஸ்புக் இன்ஸ்டாகிராமை வாங்கியுள்ளது தெரியாமல் உள்ளனர். மேலும் 44.6 சதவிகிதம் பேர் யூடியூபை பேஸ்புக் நிறுவனத்தினுடையது என்பதும் தெரியாமலேயே உள்ளனர்.

பேஸ்புக் நிறுவனம் கடந்த 2014ம் ஆண்டில் வாட்ஸ்அப் நிறுவனத்தை 19 பில்லியன் டாலருக்கு வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.