மோட்டோ பிராண்டில் புதிய மற்றும் பவர்ஃபுல்லான பேட்டரி கொண்ட மாடல் குறித்தான டீசர் ஒன்றை மோட்டோரோலா வெளியிட்டுள்ளது. பேட்டரியை குறிப்பிட்டுள்ள நிலையில் மோட்டோ E4 ப்ளஸ் மாடலாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

5,000mAh பேட்டரியுடன் மோட்டோ E4 ப்ளஸ் விரைவில்..!

மோட்டோ E4 ப்ளஸ்

சமீபத்தில் மோட்டோ பிராண்டில் வெளியான மோட்டோ சி மற்றும் மோட்டோ சி ப்ளஸ் போன்ற மாடல்களை தொடர்ந்து மோட்டோ E4 ப்ளஸ் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டீசர் ஒன்றை மோட்டோரோலா வெளியிட்டுள்ளது.

 

புதிதாக வெளியிடப்பட்டுள்ள டீசர் படத்தில் பேட்டரி படத்தை குறிப்பிட்டு oops என குறிப்பிட்டுள்ளதை தொடர்ந்த இந்த மாடல் மோட்டோ இ4 ப்ளஸ் ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என எதிர்பார்ப்பு கூடியுள்ள நிலையில் இந்த கருவி பற்றி சில விபரங்களை காணலாம்.

5.5 அங்குல ஹெச்டி திரையுடன் கூடிய மோட்டோ இ4 ப்ளஸ் கருவி 1280 x 720 பிக்சல் தீர்மானத்துடன் 2.5டி வளைந்த கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் 1.4GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 427 SoC பிராசஸர் உடன் 2ஜிபி ரேம் கொண்டதாக விளங்குகின்றது.16ஜிபி மற்றும் 32ஜிபி என இரு உள்ளடங்கிய மெமரி வசதியுடன் கிடைக்கின்றது.

ஆண்ட்ராய்டு நௌகட் 7.1 இயங்குதளத்தில் செயல்படுகின்ற இந்த மொபைலில் எல்இடி ஃபிளாஷ், HDR போன்ற வசதிகளை பெற்ற 13 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது. முன்புறத்தில் 5 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் கேமரா வசதியுடன் கிடைக்கின்றது.

4G LTE, வை-ஃபை 802.11 b/g/n, புளூடூத் 4.1, ஜிபிஎஸ்/A-ஜிபிஎஸ் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் போன்றவற்றுடன் 5,000mAh திறன் பெற்ற பேட்டரியால் இயக்கப்படும் வகையிலான அம்சத்தை கொண்டதாக வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.