சர்வதேச அளவில் 773 மில்லியன் இமெயில்கள் மற்றும் 21 மில்லியன் பாஸ்வோர்டுகளை விபரம் லீக்காகியுள்ளது. மிகப்பெரிய அளவில் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் பாஸ்வோர்டு விபரங்கள் வெளியாகி அதிர்ச்சி தந்துள்ளது.
இமெயில் லீக் விபரம்
முதன்முறையாக Troy Hunt இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் சுமார் சர்வதேச அளவில் 771 மில்லியன் மின்னஞ்சல்கள் மற்றும் 21 மில்லியன் பாஸ்வோர்டு விபரங்களை Collection #1 என்ற பெயரில் 12,000 பைல்களாக மொத்தமாக 87 ஜி.பி. அளவில் மெகா என்ற ஹோஸ்டிங் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
Collection #1 என வெளியிடப்பட்டுள்ள இந்த பைலில் மொத்தமாக 772,904,991 மின்னஞ்சல்களில் வெளியிடப்பட்டுள்ள விபரத்தில் 1,160,253,228 இமெயில்களின் பாஸ்வோர்டுடன் வெளியிடப்பட்டுள்ளதால் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உங்கள் மின்னஞ்சல் பாதிக்கப்பட்டுள்ளதா ?
Have I been Pwned என்ற முகவரியில் Have I been Pwned என்ற இணையதளத்தில் உங்களது மின்னஞ்சல் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதனை அறிந்து கொள்ளலாம். உங்களது மின்னஞ்சலை உள்ளீட்டு அறிந்து கொள்ளலாம்.
கீழே உள்ள ஸ்கீரின்ஷாட்டை பார்க்கலாம்.