சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐஓஎஸ் 11 இயங்குதளம் 8 ஐபோன்களுக்கு கிடைக்க உள்ளது.அந்த 8 ஐபோன்களின் பட்டியல் கீழே வழங்கப்பட்டுள்ளது.

எந்த ஐபோனுக்கு ஆப்பிள் ஐஓஎஸ் 11 அப்டேட் கிடைக்கும்..!

ஆப்பிள் ஐஓஎஸ் 11 அப்டேட்

WWDC 2017 அரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஐபோன் மற்றும் ஐபேட்களுக்கான இயங்குதளமான iOS 11 ல் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ்11 இயங்குதளம் கிடைக்க உள்ள 8 மொபைல்கள் பற்றி காணலாம்.

1. ஆப்பிள் ஐபோன் 5S

கடந்த 2013ல் ஐஓஎஸ் 7 இயங்குதளத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட 4 இஞ்ச் ரெட்டினா இல்லாத ஆப்பிள் ஐபோன் 5S மாடலுக்கு புதிய அப்டேட் கிடைக்க உள்ளது. இந்த மொபைலில் A7 சிப்செட் பிராசஸர் பயன்படுத்தப்பட்டு 12 மெகாபிக்சல் முன்புறம் எதிர்கொள்ளும் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் பின்புற கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

2. ஆப்பிள் ஐபோன் 5SE

2016-ல் ஐஓஎஸ் 9 இயங்குதளத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட 4 இஞ்ச் ரெட்டினா பெற்ற ஆப்பிள் ஐபோன் 5SE மாடலுக்கு புதிய அப்டேட் கிடைக்க உள்ளது. இந்த மொபைலில் A9 சிப்செட் பிராசஸர் பயன்படுத்தப்பட்டு 12 மெகாபிக்சல் முன்புறம் எதிர்கொள்ளும் கேமரா மற்றும் 1.2 மெகாபிக்சல் பின்புற கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

எந்த ஐபோனுக்கு ஆப்பிள் ஐஓஎஸ் 11 அப்டேட் கிடைக்கும்..!

3. ஆப்பிள் ஐபோன் 6

2014ல் ஐஓஎஸ் 8 இயங்குதளத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட 4.7 இஞ்ச் ரெட்டினா இல்லாத ஆப்பிள் ஐபோன் 6 மாடலுக்கு புதிய அப்டேட் கிடைக்க உள்ளது. இந்த மொபைலில் A8 சிப்செட் பிராசஸர் பயன்படுத்தப்பட்டு 1.2 மெகாபிக்சல் முன்புறம் எதிர்கொள்ளும் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் பின்புற கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

4. ஆப்பிள் ஐபோன் 6 ப்ளஸ்

2014ல் ஐஓஎஸ் 8 இயங்குதளத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட 5.5 இஞ்ச் ரெட்டினா இல்லாத ஆப்பிள் ஐபோன் 6 ப்ளஸ் மாடலுக்கு புதிய அப்டேட் கிடைக்க உள்ளது. இந்த மொபைலில் A8 சிப்செட் பிராசஸர் பயன்படுத்தப்பட்டு 1.2 மெகாபிக்சல் முன்புறம் எதிர்கொள்ளும் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் பின்புற கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

5.ஆப்பிள் ஐபோன் 6S

2015ல் ஐஓஎஸ் 9 இயங்குதளத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட 4.7 இஞ்ச் ரெட்டினா ஆப்பிள் ஐபோன் 6S மாடலுக்கு புதிய அப்டேட் கிடைக்க உள்ளது. இந்த மொபைலில் A9 சிப்செட் பிராசஸர் பயன்படுத்தப்பட்டு 5 மெகாபிக்சல் முன்புறம் எதிர்கொள்ளும் கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் பின்புற கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

 

6.ஆப்பிள் ஐபோன் 6S ப்ளஸ்

2015ல் ஐஓஎஸ் 9 இயங்குதளத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட 5.5 இஞ்ச் ரெட்டினா ஹெச்டி ஆப்பிள் ஐபோன் 6எஸ் ப்ளஸ் மாடலுக்கு புதிய அப்டேட் கிடைக்க உள்ளது. இந்த மொபைலில் A9 சிப்செட் பிராசஸர் பயன்படுத்தப்பட்டு 5 மெகாபிக்சல் முன்புறம் எதிர்கொள்ளும் கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் பின்புற கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

7.ஆப்பிள் ஐபோன் 7

2016ல் ஐஓஎஸ் 10 இயங்குதளத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட 4.7 இஞ்ச் ரெட்டினா  ஹெச்டி திரை பெற்ற ஆப்பிள் ஐபோன் 7 மாடலுக்கு புதிய அப்டேட் கிடைக்க உள்ளது. இந்த மொபைலில் A10 சிப்செட் பிராசஸர் பயன்படுத்தப்பட்டு 7 மெகாபிக்சல் முன்புறம் எதிர்கொள்ளும் கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் பின்புற கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

எந்த ஐபோனுக்கு ஆப்பிள் ஐஓஎஸ் 11 அப்டேட் கிடைக்கும்..!

8. ஆப்பிள் ஐபோன் 7 ப்ளஸ்

2016ல் ஐஓஎஸ் 10 இயங்குதளத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட 5.5 இஞ்ச் ரெட்டினா  ஹெச்டி திரை பெற்ற ஆப்பிள் ஐபோன் 7 ப்ளஸ் மாடலுக்கு புதிய அப்டேட் கிடைக்க உள்ளது. இந்த மொபைலில் A10 சிப்செட் பிராசஸர் பயன்படுத்தப்பட்டு 7 மெகாபிக்சல் முன்புறம் எதிர்கொள்ளும் கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் பின்புற கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here