குவாட்ரூட்டர் ( Quadrooter) என்றால் ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள 4 குவால்காம் சிப்செட்கள் வாயிலாக பிழைகள் (Bugs) இருப்பதாக இஸ்ரேல் நாட்டின் ஹார்ட்வேர் மற்றும் மென்பொருள் நிறுவனம் செக்பாயின்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது.

900 மில்லியன் ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு ஆபத்து : குவாட்ரூட்டர்

செக்பாயிட் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரசத்தி பெற்ற சிப்கள் தயாரிக்கும் குவால்காம் பிரிவால் தயாரிக்கப்பட்டுள்ள 900 மில்லியன் ஆண்ட்ராய்டு டேப்ளெட் மற்றும் ஸ்மார்ட்போன்கள் மிக எளிதாக இந்த சிப்செட்கள் வழியாக பாதிப்பினை ஏற்படுத்தி உங்கள் தனியுரிமை சார்ந்த தகவல்களை திருடலாம் என தெரிவித்துள்ளது.

செக்பாயின்ட் நிறுவனத்தின் மொபைலிட்டி தலைவர் கூறுகையில் அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களில் இந்த குறைபாடுகளின் மூலம் ஆண்ட்ராய்டு சாதனங்களை தாக்குவதற்கு வாய்ப்புள்ளதாக கூறுகிறார்.

பாதிக்கும் வகையிலான சிப்செட் உள்ள மாடல்கள்

 • பிளாக்பெர்ரி பிரிவ் 
 • பிளாக்போன் 1 & 2 
 • கூகுள் நெக்சஸ் 5X ,  நெக்சஸ் 6 , நெக்சஸ் 6P
 • ஹெச்டிசி ஒன் , ஹெச்டிசி M9 , ஹெச்டிசி 10 
 •  எல்ஜி G4 , G5 , V10 
 • புதிய மோட்டோ எக்ஸ்
 • ஒன்ப்ளஸ் ஒன் , ஒன்ப்ளஸ் 2 ,ஒன்ப்ளஸ் 3
 • சாம்சங் கேலக்சி S7  , சாம்சங் கேலக்சி S7எட்ஜ்
 • சோனி எக்ஸ்பீரியா Z ultra

போன்ற பல புதிய மொபைல்களில் பாதிக்கும் வகையிலான சிப்செட்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் தொடக்கத்திலே பிழைகள் குறித்த அறிக்கையை குவால்காம் நிறுவனத்துக்கு செக்பாயின் அனுப்பியுள்ளது. இந்த பிழைகளை குவால்காம் தற்பொழுது நீக்கும் வழிமுறையை வரும் புதிய சிப்செட்களில்பயன்படுத்த உள்ளது எனவும் செக்பாயின்ட் தெரிவித்துள்ளது.

குவாட்ரூட்டர் பாதிப்புகளை தடுப்பது எவ்வாறு ?

குவாட்ரூட்டர் பாதிப்புகளை தவிரக்க சில வழிமுறைகளை செக்பாயின்ட் வெளியிட்டுள்ளது.அவை

 • உங்கள் ஆண்ட்ராய்டு சாதனங்களை புதிய இயங்குதளத்துக்கு மேம்படுத்துங்கள்.
 • ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை கூகுள் பிளே ஸ்டோரில் மட்டுமே தரவிறக்கம் செய்யுங்கள்.
 • ஓவ்வொரு ஆப்ஸ் இன்ஸ்டால் செய்யும்பொழுது அதன் கணக்கினை சரிபாருங்கள்.
 • ஆப்ஸ் அனுமதிகளை மிக கவனமாக படித்த பின்னர் இன்ஸ்டால் செய்யுங்கள்.
 • மூன்றாவது இணையதளங்களில் இருந்து ஆப்ஸ்களை தரவிறக்கம் செய்வதனை தவிருங்கள்.
 • பாதுகாப்பற்ற வை-ஃபை இணைப்புகளை பயன்படுத்த வேண்டாம்

GREAT INDIAN SALE OFFERS  – click blinking image

 • Up to 50% OFF on ELECTRONICS
 • Up to 70% OFF on Amazon Fashion..
 • Up to 60% OFF on BOOKS & ENTERTAINMENT with a minimum 50% OFF on TOP 25 books.
 • Up to 60% OFF on HOME & KITCHEN ..
 • Up to 60% OFF on TOYS, HOUSEHOLD ITEMS & PERSONAL CARE 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here