ஆதார் எண் மூலம் பணம் செலுத்துவதற்கு உருவாக்கப்பட்டுள்ள  பயோமெட்ரிக் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதல் ஆதார் பே ஆப் ஐடிஎஃப்சி வங்கி அறிமுகம் செய்துள்ளது.

ஆதார் பே ஆப் பற்றி 10 முக்கிய விபரங்கள் அறிவோம்

ஐடிஎஃப்சி வங்கியின் வாயிலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஆதார் பே ஆப் பற்றி 10 முக்கிய விபரங்களை இங்கே அறிந்துகொள்ளலாம். முதல்முறையாக தனியார் வங்கியால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதல் ஆதார் பே ஆப் இதுவாகும்.

ஆதார் பே செயலி பற்றி 10 தகவல்கள்

1.  முதல் ஆதார் ஆப்

மத்திய அரசின் டிஜிட்டல் திட்டத்தின் அங்கமாக செயல்படுத்தப்பட்டு வரும் மின்னனு பரிவர்த்தனை நடைமுறையை அதிகரிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள ஆதார் அடிப்படையிலான இந்த செயலில் எவ்விதமான கூடுதல் கட்டணமும் இல்லாமல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.

2. கிரெடிட்/டெபிட் கார்டு தேவையில்லை

இந்த பயன்பாட்டிற்கு எவ்விதமான டெபிட் அல்லது கிரெடிட் போன்ற எந்த கார்டுகளும் தேவையில்லை என்பதனால் எவ்விதமான கூடுதல் கட்டணமும் இல்லாமல் பரிவர்த்தனையை செய்யலாம்.

3. ஸ்மார்ட்போன் தேவையில்லை

பொருட்களை வாங்கிய பின்னர் ஸ்மார்ட்போன் போன்றவை இல்லாமல் நீங்கள் பணத்தை செலுத்தலாம். விற்பனையாளர் மொபைல் வழியாக பணத்தை செலுத்தலாம்.

ஆதார் பே ஆப் பற்றி 10 முக்கிய விபரங்கள் அறிவோம்

4. கைநாட்டு

உங்கள் கைரேகை தான் உங்கள் கணக்கின் பாஸ்வோர்டு , நீங்களை பணத்தை செலுத்த உங்கள் கைரேகை மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை கொண்டு பரிவர்த்தணையை மேற்கொள்ள இயலும்.

5. ஆதார் எண் இணைத்த வங்கி கணக்கு

ஆதார் ஆப் வழியாக பண பரிவர்த்தனையை செய்யும் பொழுது உங்கள் வங்கி கணக்கில் ஆதார் எண் கண்டிப்பாக இணைக்கப்பட்டிருக்கும்.

6. ஆதார் பே ஆப் எவ்வாறு இயங்குகின்றது

வாங்கிய பொருளுக்கு பணத்தை செலுத்துவதற்கு உங்களுடைய ஆதார் எண்ணை விற்பனையாளரின் பே ஆப் வழியாக பதிவு செய்த பின்னர் உங்களுடைய கைரேகை அல்லது பயோமெட்ரிக் தகவலை பாஸ்வோர்டு ஆக பயன்படுத்தலாம்.

7. ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு கூகுள் பிளே ஸ்டோரில் மட்டுமே முதற்கட்டமாக ஆதார் பே ஆப் தற்பொழுது கிடைக்கின்றது.

ஆதார் பே ஆப் பற்றி 10 முக்கிய விபரங்கள் அறிவோம்

8. அதிகபட்சமாக 10,000

அதிகபட்சமாக ரூ.10,000 மட்டுமே செலுத்த முடியும்.

9. இணையம்

கார்டினை பரிவர்த்தனையை போன்று டெலிபோன் லைன்கள் இல்லாமல் இணையத்தில் மட்டுமே இயக்கலாம்.

10. விற்பனையாளர்

விற்பனையாளர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் ஆதார் ஆப் தரவிறக்கி வங்கி கணக்கை இணைத்து செலுத்தி கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here