ரூ. 75,990 விலையில் ஏசர் நிட்ரோ 5 கேமிங் லேப்டாப் பிரத்தியேகமாக ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் எக்ஸ்குளூசிவாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ஏசர் நிட்ரோ 5

கேமிங் பெர்ஃபாமென்சுக்கு ஏற்ற மாடலாக விளங்குகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக கேமிங் லேப்டாப் மாடலாக  i7 அல்லது i5 இன்டெல் கோர் பிராசஸருடன் கூடிய மாடலாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

மேட் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்ட நிறத்தில் கிடைக்க உள்ள இந்த மடிக்கணினியில் WSAD கீ போர்டின் பின்புலத்தில் சிவப்பு நிற விளக்குகள் இணைக்கப்பட்டு 7 வது தலைமுறை i7 அல்லது i5 இன்டெல் கோர் பிராசஸருடன் NVIDIA GeForce GTX 1050/1050Ti கிராபிக்ஸ் கார்டினை பெற்றுள்ளது.

15.6 அங்குல திரையுடன் கூடிய 1920×1080 பிக்சல் தீர்மானத்துடன் கூடிய நிட்ரோ 5 மடிக்கணினியில் 4GB DDR5 ரேம் பெற்றுள்ளதுடன் 16GB RAM வரை பெறும் திறனுடன் 128GB SSD சேமிப்பு வசதியுடன் கூடுதலாக 1TB HDD பெற்றுள்ளது.

டூயல் ஃபேன்களை பெற்ற ஏசர் கூல் பூஸ்ட் டெக்னாலாஜி பெற்றதாக வந்துள்ள இதில் டால்பி ஆடியோ பிரிமியம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் யூஎஸ்பி 3.1 Type-C , புளூடூத் , வை-ஃபை போன்றவற்றை பெற்றுள்ளது.