இறுதி அப்டேட்.., அடோபி ஃபிளாஷ் பிளேயர் சகாப்தம் முடிவுக்கு வருகின்றது

கடந்த 20 ஆண்டுகளாக புழகத்தில் இருந்த பிரசத்தி பெற்ற அடோபி ஃபிளாஷ் பிளேயர் (Flash Player) தனது இறுதி மேம்பாட்டை பெற்றிருப்பதுடன், 2020 டிசம்பர் 31 அன்று ஃபிளாஷ் ஆதரவை நிறுத்தவும், அதனை தொடர்ந்து 2021 ஜனவரி 12  முதல் ஃப்ளாஷ் உள்ளடக்கத்தை இயக்குவதைத் தடுக்கும்.

அடோப் நிறுவனம் வெளியீட்டுக் குறிப்புகளில் சுருக்கமான பிரியாவிடை அளித்த உரை. “கடந்த இரண்டு தசாப்தங்களாக அற்புதமான ஃப்ளாஷ் பிளேயர் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி உருவாக்கிய எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் டெவலப்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க நாங்கள் சிறிது நேரம் எடுத்துக் கொள்ள விரும்புகிறோம்” என்று குறிப்பிடுகின்றது. “அனிமேஷன், உரையாடும் திறன், ஆடியோ மற்றும் வீடியோ முழுவதும் வலை உள்ளடக்கத்தை உருவாக்குவதில் ஃப்ளாஷ் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். டிஜிட்டல் அனுபவங்களின் அடுத்த சகாப்தத்தை வழிநடத்த உதவுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அடோப் இறுதியாக ஆதரவை நிறுத்துவதாக அறிவித்த 2017 முதல் ஃப்ளாஷ்க்கு மாற்றாக  HTML5 போன்ற புதிய தரங்களுக்கு அடோப் 2015 முதல் டெவலப்பர்களை வலியுறுத்தியது. தற்போது அனைத்து முன்னணி வலை பிரவுசர்களும் ஃபிளாஷ் ஆதரவை நீக்கிவிட்டு மாற்றாக HTML5 முறைக்கு மேம்படுத்திக் கொண்டன.

பாதுகாப்பு காரணங்களுக்காக பயனாளர்களை அடோப் ஃபிளாஷ் பிளேயரை நீக்க கோரிக்கை விடுத்துள்ளது.