கடந்த சில நாட்களாக உலகை அச்சுறுத்தி வந்த ரேன்சம்வேர் வானாக்ரை தாக்குதலை தொடர்ந்து அடுத்த ரேன்சம்வேராக UIWIX வந்துள்ளதாக சீனா எச்சரிக்கின்றது.

UIWIX ரேன்சம்வேர்

வானாக்ரை தாக்குதலால் 150 க்கு மேற்பட்ட நாடுகளில் 3 லட்சத்துக்கு மேற்பட்ட கணினிகள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது வானக்ரை போன்ற மற்றொரு ரேன்சம்வேர் மேற்கத்திய நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளில் விண்டோஸ் கணினிகளை தாக்குதவதாக சீனாவின் செய்தி பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த ரான்சம்வேர் தாக்குதலும் வானாக்ரை போன்றே பழைய விண்டோஸ் இயங்குதளங்களை ஹேக் செய்து பிட்காயின் வழியாக பணத்தை செலுத்த வேண்டுகோள் விடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வானாக்ரை தாக்குதலைசமாளிக்க மென்பொருள் மேம்பாடு வழங்கப்பட்டுள்ள நிலையில் UIWIX ரான்சம்வேருக்கு இதுவரை எந்த மென்பொருள் மேம்பாடும் வழங்கப்படவில்லை. எனவே உங்களது மின்னஞ்சலில் வருகின்ற மெயில்களை அறிமுகம் இல்லாத எந்த மின்னஞ்சலை திறப்பதை முற்றிலுமாக தவிர்த்திடுங்கள்..!