ஜியோ அறிமுகம் செய்த ஜியோ போன்-க்கு எதிராக மிகவும் சவாலாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் கூடிய கார்பன் நிறுவனத்துடன் இணைந்து ரூ.1399 விலை மதிப்புடைய கார்பன் ஏ40 மொபைல் போனை ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன் என்ற பெயரில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன்

ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பின்னர் நிகழ்ந்து வரும் மாற்றங்களை ஈடுகட்டுவதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மிகவும் சவாலான திட்டங்கள் மற்றும் பன்டில் ஆஃபர்களை வழங்க தொடங்கியுள்ளன.

தற்போது இந்திய சந்தையில் குறைந்தபட்ச விலை கொண்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் விலை ரூ.3500 என அமைந்துள்ள நிலையில், முதன்முறையாக ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு வசதிகளுடன் கார்பன் நிறுவனத்துடன் இணைந்து ரூ. 2899 விலையில் ஏர்டெல் வெளியிட்டுள்ளது.

அதிகபட்சமாக வாடிக்கையாளர்கள் ரூ.1500 வரை திரும்ப பெறும் வகையிலான வழிமுறையை ஏர்டெல் அறிவித்துள்ளது.

கார்பன் A40 ஸ்மார்ட்போன்

ஜியோபோன் முற்றிலும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏர்டெல் நிறுவனம் ரூ.1399 கட்டணத்தில் ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் கார்பன் ஏ40 மொபைல் போன் ரூ.3499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ரூ.600 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

4 அங்குல திரையை பெற்றுள்ள ஏ40 மொபைல்போன் ஆண்ட்ராய்டு நௌகட் 7.0 இயங்குதளத்தை பெற்று 1.3 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் கொண்டு இயக்கப்பட்டு 1ஜிபி ரேம் கொண்டதாக 8ஜிபி உள்ளடக்கிய சேமிப்புடன் 32ஜிபி வரை விரிவுப்படுத்தக்கூடிய மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா பிரிவில் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் சென்சார் முன்புறத்தில் வீடியோ அழைப்புகள் மற்றும் செல்பி படங்களை பெற 0.3 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு சிம் கார்டு ஆதரவுடன், ஏர்டெல் செயலிகள் ப்ரிலோடு செய்யப்பட்டுள்ள நிலையில் பிரசத்தி பெற்ற வாட்ஸ்அப், ஃபேஸ்புக் அனைத்து செயலிகளையும் கூகுள் ப்ளே ஸ்டோர்ட் வாயிலாக பெறலாம். மேலும் 4ஜி வோல்ட்இ, 2ஜி மற்றும் 3ஜி ஆதரவுடன், வை-ஃபை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ளது.

ஏர்டெல் 4ஜி போன் டேட்டா பிளான்

ஜியோ நிறுவனத்தை போலவே ஏர்டெல் நிறுவனம் ரூ.169 கட்டணத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குவதுடன், 500MB டேட்டாவை வழங்குவதுடன் 28 நாட்கள் வரை வேலிடிட்டி கொண்டதாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதே திட்டத்தை மற்ற மொபைல் பயனாளர்கள் ரீசார்ஜ் செய்தால் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குவதுடன், 500MB டேட்டாவை வழங்குவதுடன் 14 நாட்கள் வரை வேலிடிட்டி கொண்டதாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1500 வரை திரும்ப பெறுவது எப்படி ?

முதல் 18 மாதங்களில் தொடர்ந்து ரூ.169 அல்லது ரூ.3000 தொகை வரை ரீசார்ஜ் செய்திருந்தால் முதல் தவனையாக ரூ.500 திரும்ப பெறலாம். இதே போல் அடுத்த 18 மாதங்களுக்கு ரூ.169 அல்லது ரூ.3000 தொகை வரை ரீசார்ஜ் செய்திருந்தால் ரூ.1000 வரை திரும்ப பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே மொத்தம் ரூ.1500 வரை திரும்ப பெறலாம் என ஏர்டெல் உறுதிப்படுத்தியுள்ளது.

ரூ.2,899 விலையில் வாங்கப்படுகின்ற கார்பன் ஏ40 மொபைலுக்கு ரூ.1500 வரை திரும்ப பெறுவதனால் ரூ.1399 மட்டுமே என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.