இந்திய தொலைத்தொடர்புதுறையில் மிகப்பெரிய 4ஜி புரட்சியை ஏற்படுத்தி ஜியோ 4ஜி வோல்ட்இ சேவைக்கு நேரடியான போட்டியாக ஏர்டெல் 4ஜி வோல்ட்இ  அடுத்த சில வாரங்களில் தொடங்கப்பட உள்ளது.

ஏர்டெல் 4ஜி வோல்ட்இ Vs ஜியோ 4ஜி வோல்ட்இ

365 நாட்களில் 13 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் 1ஜிபி டேட்டா ரூ.250 என்ற கட்டணத்திலிருந்து  ரூ.10 க்கு குறைவாக மாறிய நிலையில் ஜியோ மீதான ஈர்ப்பு ஏர்டெல் நிறுவனத்தை விட தொடர்ந்து அதிகரித்தே வருகின்றது.

இந்நிலையில் நாட்டின் முதல் வோல்ட்இ எனப்படும் உயர்தர நுட்பத்திலான அழைப்புகளை வழங்கி வரும் ஜியோ நிறுவனம் நாடு முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கு இலவசமாக அழைப்புகளை வழங்கி வருகின்றது. நாட்டின் முதன்மையான ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் அடுத்த சில வாரங்களில் முதற்கட்டமாக முன்னணி மெட்ரோ நகரங்களில் செயல்படுத்த உள்ள நிலையில் நாடு முழுவதும் வோல்ட்இ மார்ச் 2018 இறுதிக்குள் வரவுள்ளது. மற்றொரு நிறுவனமான ஐடியா செல்லூலார் நிறுவனம் வோல்ட் இந்த மாத இறுதியில் பல்வேறு நகரங்களில் செயல்படுத்த உள்ளது.

வோல்ட்இ என்றால் என்ன ?

வாய்ஸ் ஓவர் எல்டிஇ எனப்படுகின்ற (Voice over LTE VoLTE is pronounced as Vee O LTE) ஒரே சமயத்தில் வாய்ஸ் மற்றும் டேட்டாவை இயக்கும் நுட்பம் ஆகும். எல்டிஇ தொடர்பு உள்ள எண்ணிற்கு அழைத்தாலும் டேட்டா தொடர்ந்து இயக்கப்படும். அதுவே குறைந்த தரம் கொண்ட 3ஜி மற்றும் 2ஜி எண்களுக்கு அழைத்தால் டேட்டா தொடர்பு துண்டிக்கப்படும். டேட்டா இல்லாமல் வோல்டிஇ எண்களுக்கு அழைத்தாலும் தானாகவே டேட்டாவை நெட்வொர்க் செயல்படுத்திக் கொள்ளும். எல்டிஇ (LTE-  Long Term Evolution) என்றால் உயர்வேகத்தில் டேட்டாவை பெறலாம், அதுவே வோல்டிஇ என்றால் உயர்தரத்தில் அழைப்புகளை பெறலாம்.

முதற்கட்டமாக ஜியோ செயல்படுத்தி இந்த சேவையில் எண்ணற்ற வாடிக்கையாளர்களை பெற்ற இந்நிறுவனத்தை தொடர்ந்து ஏர்டெல் மற்றும் ஐடியா, பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்களும் 4ஜி VoLTE செயல்படுத்த உள்ளதால் ஏர்டெல் மிகுந்த போட்டியை எதிர்கொள்ள உள்ளது.

பொதுவாக ஜியோ நிறுவனம் எவ்விதமான மறைமுக நிபந்தனைகள் இல்லாமல் நேரடியாக தனது வாடிக்கையாளர்களுக்கு கட்டண விபரம் மற்றும் அழைப்புகள் , டேட்டா உள்ளிட்டவற்றை அனைவருக்கும் வழங்கி வருகின்றது. ஆனால் ஏர்டெல் நிறுவனம் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனியான திட்டங்கள் எனவும் குறிப்பிட்ட அளவே சேவைகளை வழங்கி வருவதனால் ஜியோ போல வரம்பற்ற சேவைகளை ஏர்டெல் வழங்கினால் மட்டுமே போட்டியில் பங்கேற்கும், இல்லையென்றால் ஜியோ தொடர்ந்து தனது பலத்தை அதிகரிக்கவே காரணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ஜியோவுக்கு பின்னடைவாக உள்ள சிக்னல் பிரச்சனை அடுத்த 6 மாதங்களுக்குள் முழுமையாக நிவர்த்தி செயப்பட உள்ளதால், ஜியோ பயன்பாடு அதிகரிக்கும்.

4ஜி பீச்சர் போன்

ஜியோ இன்ஃபோகாம் வெளியிட்டுள்ள ரூ.1500 மதிப்பிலான இலவச ஜியோஃபோன் முதற்கட்ட முன்பதிவு 60 லட்சங்களை எட்டியுள்ளதால் அடுத்தடுத்த முன்பதிவு ஜியோ வாடிக்கையார் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்பதனால், போட்டியாளர்களுக்கு மிகுந்த சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏர்டெல்,ஐடியா,வோடபோன் ஆகிய நிறுவனங்களும் ரூ.2500 விலையில் அறிமுகம் செய்ய உள்ள மொபைல் ஜியோபோனுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அமையுமா என்பதனை பொறுத்திருந்து காணலாம்.

ஜியோவை ஏர்டெல் வெல்லுமா ? உங்கள் நெட்வொர்க் எது ? மறக்காமா கமென்ட் பன்னுங்க