airtel xstreme

சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம், தனது ஏர்டெல் டிவி செயலியை ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் (Xstream) என பெயர் மாற்றியள்ளது. மேலும் ஸ்மார்ட் டிவி சேவகைளுக்கான Xstream ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் Xstream ஸ்மார்ட் ஸ்டிக் என இரு கருவிகளை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

இரு கருவிகளை அறிமுகம் செய்வது குறித்தான எந்த தகவலும் வெளியாக வில்லை. ஆனால் வெளியாகியுள்ள கருவிகள் குறித்தான விபரங்களை இங்கே காணலாம்.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் விவரங்கள்

ஆண்ட்ராய்டு-டிவி-கையேடு வெளியிட்டுள்ள தகவலின் படி குறித்த அறிக்கையின்படி, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் அண்ட்ராய்டு 9 பை ஓஎஸ் மூலம் செயல்படுகின்ற கருவியை இயக்க 1.8Ghz உடன் குவாட் கோர் CPU வழங்கப்பட்டுள்ளது. இது பிராட்காம் வீடியோ கோர் V HW (V3D-510) GPU உடன் ஜோடியாக இருக்கும். ஸ்மார்ட் பாக்ஸ் டெக்னிகலர் தயாரிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ்  பெற்ற ஸ்மார்ட் பாக்ஸ் டி.டி.எச், IPTV மற்றும் OTT உள்ளடக்கத்தை ஒளிபரப்ப முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கூகுள் குரோம்கேஸ்ட் மற்றும் அமேசான் ஃபயர் ஸ்டிக் போன்ற கருவியாக வெளியாக உள்ள ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்கில் . 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி சேமிப்பு கொண்டதாக வரவள்ளது. இந்த ஸ்மார்ட் ஸ்டிக் மூலம் பயனர்கள் OTT பயன்பாடுகளிலிருந்து உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்ய மற்றும் நேரடி டிவியைப் பார்க்க இயலும்.

அறிமுகம் மற்றும் விலை குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.