இந்தியாவில் ஆகாஷ் அம்பானி வெளியிட்ட ஆப்பிள் ஐபோன் 8 , ஐபோன் 8 பிளஸ்இந்திய சந்தையில் முறைப்படி ஆப்பிள் ஐபோன் 8 மற்றும் ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்களை முகேசு அம்பானி மகன் ஆகாஷ் அம்பானி அறிமுகம் செய்து வைத்து பல்வேறு ஜியோ சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

ஆப்பிள் ஐபோன் 8 , ஐபோன் 8 பிளஸ்

இந்தியாவில் ஆகாஷ் அம்பானி வெளியிட்ட ஆப்பிள் ஐபோன் 8 , ஐபோன் 8 பிளஸ்

இந்தாண்டின் மிகவும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக வெளியிடப்பட்டுள்ள ஐபோன் 8 மற்றும் 8 பிளஸ் கருவிகள் இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. அறிமுக விழாவில் டிம் குக் வீடியோ வழியாக தனது செய்தியை பதிவு செய்திருந்தார்.

தொலைத்தொடர்பு துறை நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இன்டஸ்டீரிஸ் குழுமத்தின் கீழ் செயல்படும் ஜியோ நிறுவனம் சார்பாக பல்வேறு டேட்டா சலுகைகள் மற்றும் விலை குறைப்புடன் வெளியிடப்பட்டுள்ள இருக்கருவிகளுக்கும் முன்பதிவு நடைபெற்று வருகின்றது.

தமிழ் உட்பட 11 இந்திய உள்ளூர் மொழிகள் ஆதரவை பெற்ற கீபோர்டினை கொண்டுள்ள ஆப்பிள் ஐபோன் 8 வரிசை கருவிகள் ரூ.64 ஆயிரம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஜியோ நிறுவனம் ஐபோன் பயனாளர்களுக்கு என பிரத்யேகமான ரூ.799 திட்டத்தில் மாதந்தோறும் 90ஜிபி டேட்டாவை போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு பயனாளர்கள் பெறலாம்.

மேலும் படிக்க – ஆப்பிள் ஐபோன் 8 மொபைல் & ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் விலை விபரம்

இந்தியாவில் ஆகாஷ் அம்பானி வெளியிட்ட ஆப்பிள் ஐபோன் 8 , ஐபோன் 8 பிளஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here