நாளை அட்சய திருதியை கொண்டாடப்பட உள்ள நிலையில் பேடிஎம் நிறுவனம் டிஜிட்டல் கோல்டு என்ற பெயரில் ரூ.1 விலையில் 24K 999.9 தங்கத்தை வாங்கும் வகையிலான திடத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அட்சய திருதியை முன்னிட்டு டிஜிட்டல் கோல்டு ரூ.1 விலையில் வாங்கலாம்

டிஜிட்டல் கோல்டு

  • ரூ 1 விலை முதல் அதிகபட்சமாக எவ்வளவு விலையிலும் டிஜிட்டல் கோல்டு வாங்கலாம்.
  • டிஜிட்டல் கோல்டு வாங்கும்பொழுது அதிகபட்சமாக ரூபாய் 101 வரை கேஸ்பேக் பெறலாம்.
  • MMTC-PAMP கூட்டணியில் தங்கத்தை பேடிஎம் விற்பனை செய்கின்றது.

குறைந்தபட்சமாக எந்த தொகையிலும் தங்கத்தை வாங்கி திரும்ப விற்பனை செய்யவோ அல்லது டெலிவரி பெற நினைத்தால் குறைந்தபட்சம் 1 கிராம் தங்கம் வாங்கியிருக்க வேண்டும்.

ரூ.11 விலையில் தங்கம் வாங்கினால் ரூ.11 வரை திரும்ப கேஸ்பேக் பெறலாம் , மேலும் வாங்கி அந்த தங்கத்தை ஆன்லைனில் திரும்ப விற்பனை செய்யலாம்.

இந்தியா உலோகம் மற்றும் கனிம வர்த்தக கழகம் (MMTC) மற்றும் PAMP சுவிட்சர்லாந்து என இரு நிறுவனங்களும் இணைந்து பேடிஎம் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்ற தங்கத்தின் மதிப்பு 24K 999.99 ஆகும்.

அட்சய திருதியை முன்னிட்டு டிஜிட்டல் கோல்டு ரூ.1 விலையில் வாங்கலாம்

பேடிஎம் தளத்தில் உள்நுழைந்த பின்னர் அட்சய திருதியை டிஜிட்டல் கோல்டு வாங்குவது எவ்வாறு என காணலாம்.

https://paytm.com/digitalgold என்ற பகுதியில் நுழைந்த நாம் கிராம் கணக்கிலோ அல்லது ரூபாய் கணக்கிலோ தங்கத்தை வாங்கலாம் குறிப்பாக நீங்கள் 11 ரூபாய் மதிப்பில் வாங்க நினைத்தால் (Buy In Rupees) வசதியை தேர்ந்தெடுத்து 11 ரூபாய் என டைப் செய்து வாங்கும்பொழுது 11 ரூபாய்க்கு எத்தனை கிராம் தங்கம் கிடைக்கின்றதோ அது உங்கள் கணக்கில் இருப்பாக வைக்கப்படும் நீங்கள் இந்த தங்கத்தை திரும்ப விற்பனை செய்யலாம் அல்லது நீங்கள் டெலிவரி பெறலாம், ஆனால் டெலிவரி பெற குறைந்தபட்சமாக 1 கிராம் வாங்கி இருக்க வேண்டும்.

24k @ ரூ.3002.4/g மற்றும் 22k @ ரூ.2752.6/g

அட்சய திருதியை முன்னிட்டு டிஜிட்டல் கோல்டு ரூ.1 விலையில் வாங்கலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here