உலகின் முதல் அலெக்ஸா iMCO வாட்ச் விற்பனைக்கு வந்தது

உலகின் முதல் அலெக்ஸா தளத்தில் இயங்குகின்ற iMCO வாட்ச் ரூ.13,999 விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. கோவாட்ச் நிறுவனமே தற்போது ஐஎம்கோ ஆகும்.

 

அலெக்ஸா iMCO வாட்ச்

உலகின் முதல் அமேசான் அலெக்ஸா தளத்தில் செயல்படுகின்ற கைக்கடிகாரமாக அறிமுகம் செய்யப்பட்ட ஐஎம்கோ வாட்ச் இந்தியாவில் yerha.com வழியாக சில்வர் மற்றும் கருப்பு என இரு வண்ணங்களில் கிடைக்க உள்ளது.

அமேசான் அலெக்ஸா குரல் வழி உதவி வாயிலாக தினசரி வானிலை அறிக்கை, ஆன்லைன் பொருட்கள் ஆர்டர், சாலை டிராஃபிக், அமேஸானில் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை டிராக் செய்ய ,ஸ்மார்ட் ஹோம் பொருட்களை கட்டுப்படுத்த மற்றும் ஸ்டாப்வாட்ச் ,டைமர் ,அலாரம் என பல்வேறு விதமான பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் ஐஎம்கோ வாட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாட்சினை ஆண்ட்ராய்டு 5.0 இயங்குதளம் அல்லது அதற்கு மேற்பட்ட தளங்கள் மற்றும் ஆப்பிள் iOS v9.0 போன்றவற்றுக்கு மேல் உள்ள ஸ்மார்ட்போன் வாயிலாக இணைப்பினை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

முழு வட்ட வடிவ 400×400 பிக்சல் தீர்மானம் கொண்ட AMOLED டிஸ்பிளே பெற்ற இந்த வாட்ச் தூசு மற்றும் நீர்புகா அமைப்புடன் 1.2GHz டூயல் கோர் பிராசஸருடன் 1ஜிபி ரேம் பெற்று 8ஜிபி உள்ளடங்கிய மெமரி பெற்றதாக கிடைக்கின்றது. மற்ற துனை விருப்பங்களாக வை-ஃபை 802.11b./g/n மற்றும் புளூடூத் 4.1 மற்றும் இதய துடிப்பை அறிய உதவும் சென்சாரும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் ஐஎம்கோ அலெக்ஸா வாட்ச் விலை ரூ.13,999 ஆகும்.

Recommended For You