அமேஸான் அறிமுகம் செய்துள்ள புதிய அமேஸான் ஃபயர் டிவி ஸ்டிக் ரூபாய் 3,999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இணையத்தின் வாயிலாக தொலைக்காட்சி சேவைகளை பெறலாம்.

அமேஸான் ஃபயர் டிவி ஸ்டிக்

  • அமேஸான் பிரைம் வீடியோக்களை எளிதாக இனி கண்டு களிக்கலாம்.
  • ரூபாய் 499 கேஸ்பேக் சலுகையை பிரைம் சந்தாதாரர்கள் பெறலாம்.
  • ஏர்டெல் 100ஜிபி இலவச டேட்டாவை மூன்று மாதங்களுக்கு வழங்குகின்றது.
  • யூ பிராட்பேண்ட் 240 ஜிபி இலவச டேட்டாவை மூன்று மாதங்களுக்கு வழங்குகின்றது.

பல்வேறு விதமான உயர்தர சேனல்கள் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ, ஆப்ஸ், நெட்ஃபிலிக்ஸ், யூடியூப், ஹாட்ஸ்டார், யூரோஸ் நவ் , கானா போன்ற பலவற்றை மிக சுலபமாக HDMI போர்ட் உள்ள டிவிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் பெறும் வகையில் வைஃபை வசதியும் அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்கில் வழங்கப்பட்டுள்ளது.

க்ரோம்கேஸ்ட்க்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்டிக்கில் அறிமுக சலுகையாக ஏர்டெல் பிராட்பேண்ட் மற்றும் 4ஜி ஹோம் வைஃபை சேவையை பெற்றுள்ளவர்களுக்கு மூன்று மாதம் 100ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகின்றது. மேலும் யூ பிராட்பேண்ட் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 240ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது. இதுதவிர மூன்று மாத இலவச யூரோஸ் நவ் பிரிமியம் சப்ஸ்கிரைப்ஷன் மற்றும் 6 மாதம் விளம்பரமின்றி கானா சேவையை பெறலாம்.

அமேஸான் ஃபயர் டிவி ஸ்டிக் உடன் வழங்கப்படுகின்ற ரிமோட்டில் குரல் வழி தேடல் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 3,000க்கு மேற்பட்ட ஆப்ஸ், கேம்ஸ் உள்பட பலதரப்பட்ட சேவைகளை பெற குறைந்தபட்ச இணைய வேகம் 4Mbps ஆக இருக்க வேண்டும்.

அமேஸான் பிரைம் வீடியோ உறுப்பினர்களுக்கு ரூபாய் 499 வரை கேஸ்பேக் சலுகை கிடைக்கின்றது. மேலும் அமேசான் தவிர க்ரோமா மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளிலும் கிடைக்கும்.

இதனை வாங்க