அமேசானின் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு  இந்தியன் சேல் தொடக்கம்

ஆன்லைன் வணிகதளமான அமேசான் மீண்டும் தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. “கிரேட் இண்டியன் பெஸ்டிவல்” அக்டோபர் 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அமேசான் நிறுவனம் இந்திய சந்தைக்குள் நுழைந்து 5 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவ்வப்போது அதிரடி ஆஃபர் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற அமேசானின் தள்ளுபடி விற்பனையானது அந்நிறுவனத்தின் சிறந்த விற்பனயாக அமைந்தது.

அமேசானின் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு  இந்தியன் சேல் தொடக்கம்

இந்த நிலையில், மற்றொரு “கிரேட் இண்டியன் பெஸ்டிவல்” மூலம் 10 கோடிக்கும் அதிகமான பொருட்களைக் கொண்டு, தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ள அமேசான் நிறுவனம். இந்த தள்ளுபடி விற்பனையில் சிட்டி பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு 10 சதவீத கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதேபோல, அமேசான் பே-பேலன்ஸ் மூலமாக ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3 சதவீத தொகை திரும்ப கிடைக்கும் என அமேசான் தெரிவித்துள்ளது.

அமேசானின் பிரைம் வாடிக்கையாளர்கள் முன்னதாகவே, அதாவது, இன்று இரவே இந்த கிரேட் இந்தியன் சேலில் பங்குப்பெறலாம்.

அமேசானின் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு  இந்தியன் சேல் தொடக்கம்

சாம்சங், சோனி, எச்.பி, எல்.ஜி, நோக்கியா மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு ‘பிக்-டீல்ஸ்’ உள்ளதாம். குறிப்பிடும்படியாக, ப்ரொமோஷன் பேனரில் ஜபோன், ஒன் ப்ளஸ், டெல், ஹானர், விவோ, ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன. வாடிக்கையாளர்களை மேலும் கவரும் வகையில், நோ-காஸ்ட் இ.எம்.ஐ, எக்ஸ்சேன்ஞ் ஆஃபர் உள்ளது எனவும் அமேசான் தெரிவித்துள்ளது.

முன்னதாக நடைபெற்ற அமேசான் தள்ளுபடி விற்பனையின்போது, ஸ்மார்ட்போன்ஸ் மற்றும் வீட்டுக்கு தேவையான உபகரணங்கள் ஆகியவை அதிகளவு சேல்ஸ் ஆனதாம். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை விற்பனையை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 2.5 மடங்கு அதிக ஸ்மார்ட்போன்ஸ் மற்றும் வீட்டுக்கு தேவையான உபகரணங்கள் 4 மடங்கு அதிகம் விற்பனை செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளதாம். எனவே, தீபாவளி பண்டிகையை கொண்டாட, வாடிக்கையாளர்கள் தயாராக இருங்கள்.

Comments are closed.