வரும் 11ல் தொடங்குகிறது அமேசான் கிரேட் இந்திய திருவிழா 2018

பிளிப்பார்ட்டின் பிக் பில்லியன் டே சேல் அறிவிக்கப்பட்ட நிலையில், அமேசான் தனது கிரேட் இந்திய திருவிழாவை அறிவித்துள்ளது. இந்த திருவிழா வரும் 11ம் தேதி முதல் தொடங்க உள்ளது. வரை 15ம் தேதி வரை நடக்க உள்ள இந்த திருவிழாவில் பிரைம் கஸ்டமர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன், ஹோம் அப்ளையன்ஸ், டிவிகள், கிச்சன் பொருட்கள் போன்றவைகளை இந்த திருவிழாவின் போது சலுகை விலையில் வாங்கி கொள்ளலாம்.

இதுமட்டுமின்றி பேஷன், பலசரக்கு, அழகுகளை, எலக்ட்ரானிக்ஸ் போன்ற பொருட்களும் சலுகை விலையில் கிடைக்கும், மேலும் எஸ்பிஐ கார்டு மூலம் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவிகித டிஸ்கவுன்ட், அமோசன் பே யில் 3000 ரூபாய் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அல்லது அமேசான் பே மூலம் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 300 ரூபாய் வரை  காம்ளிமேன்டரி பேலன்ஸ் அளிக்கப்பட உள்ளது.

வரும் 11ல் தொடங்குகிறது அமேசான் கிரேட் இந்திய திருவிழா 2018

இதுமட்டுமின்றி நோ-காஸ்ட் இஎம்ஐ ஆப்சன்கள், பஜாஜ் பின்சர்வ், ஐசிஐசிஐ, ஆக்சஸ் மற்றும் ஹெச்டிஎப்சி வங்கிகளுக்கு இந்த சலுகை அறிவித்துள்ளன. இந்த திருவிழாவின் போது வாங்கப்படும் பொருட்களுக்கு மொத்த டேமேஜ் பாதுகாப்பையும் வழங்க உள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருந்தபோதும் எந்தெந்த ஸ்மார்ட் போன்களுக்கு இந்த திருவிழாவில் இடம் பெற போகிறது என்ற விபரத்தை அமேசான் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

இந்தியாவின் முன்னணி ரீடெயில் நிறுவனமான அமேசான், வாடிக்கையாளர்களுக்கான போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு 5 லட்சம் மதிப்பு கொண்ட பரிசுகளையும் வழங்க உள்ளது. மேலும் கோல்டன் ஹவர் டீல்களும் இடம் பெறும்.

வரும் 11ல் தொடங்குகிறது அமேசான் கிரேட் இந்திய திருவிழா 2018

அமேசான் நிறுவனத்தின் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களுக்கு பல்வேறு சலுகைக்ளுடைன் 3,500 ரூபாய் வரை தள்ளுபடியும் இந்த திருவிழாவின் போது அளிக்கப்படும். இதுமட்டுமின்றி ஜெபரா மற்றும் போஸ் உள்ளிட்ட ஸ்பீக்கர்களை 60 சதவிகித டிஸ்கவுன்ட் விலையில் வாங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.