பிளிப்கார்ட் தளத்தை கைப்பற்ற அமேசான் அதிரடி திட்டம்ஆன்லைன் விற்பனையில் முன்னோடி நிறுவனமாக விளங்கும் அமேசான், இந்தியாவின் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஃபிளிப்கார்ட்டை கைப்பற்றுமா ? அமேசான்

பிளிப்கார்ட் தளத்தை கைப்பற்ற அமேசான் அதிரடி திட்டம்

இனி வரும் காலங்களில் ஆன்லைன் விற்பனை நிலையங்கள்தான் என இந்த டிஜிட்டல் உலகில் மாறி வருகின்ற சூழ்நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் முன்னணி ஷாப்பிங் இணையதளமான அமேசான், தனது போட்டியாளரான வால்மார்ட்டினை விட மிக சிறப்பான பங்களிப்பினை வழங்கும் நோக்கில் அதிரடியான திட்டங்களை கையிலெடுத்துள்ளது.

சீனா, இந்தியா போன்ற நாடுகளை தவிர , அமேசான் செயல்படுகின்ற பல்வேறு நாடுகளில் முதல் இரண்டு இடங்களில் தங்களது பெயரை பதித்து வரும் இந்நிறுவனம், உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் சந்தையாக மாறி வரும் இந்தியாவில் மிக கடுமையான சவாலை பெங்களுருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் மூலம் எதிர்கொண்டு வருகின்றது.

வால்மார்ட் நிறுவனம், ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் மூதலீட்டை செய்ய தீவரமான முயற்சியில் இறங்கியதை தொடர்ந்து, போட்டியாளரை வென்றெடுக்க இதே களத்தில் அமேசான் நிறுவனமும் ஃபிளிப்கார்ட்டை இரண்டாம் நபர்களிடம் இருந்து விலைக்கு வாங்க குதித்துள்ளது. இரு நிறுவனங்களும் இந்தியாவின் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை கைப்பற்ற மிக கடுமையான போட்டியை எதிர்கொண்டு வரும் நிலையில் இந்நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.