உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக விளங்கும் அமேசான், அமேசான் பிரைம் என்ற பெயரில் வீடியோ ஸ்டிரீமிங் சேவையை வழங்கி வரும் நிலையில், இந்தியாவில் இசை சார்ந்த அமேசான் மியூசிக் (Amazon Music) சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமேசான் மியூசிக்

ஆன்லைன் வரத்தகம், வீடியோ ஸ்டிரீமிங் ஆகிய சேவைகளில் முன்னணி வகிக்கின்ற அமேசான் இந்தியா நிறுவனம், கானா , ஸாவன் (Saavn), ஆப்பிள் ம்யூஸிக் ஆகிய சேவைகளுக்கு சவால் விடுக்கும் வகையில் பிரைம் மியூசிக் சேவையை தொடங்கியுள்ளது.

முற்கட்டமாக இந்த சேவையில் தமிழ் உட்பட ஹிந்தி, ஆங்கிலம், பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி, போஜ்புரி, குஜராத்தி மற்றும் ராஜஸ்தானி என மொத்தம் 12 மொழிகளில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சேவையை அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் பெற்று மகிழும் வகையில் சிறப்பான அம்சங்களை கொண்டதாக செயற்படுத்தப்பட்டுள்ளது. அமேசான் இசை சார்ந்த சேவை அமெரிக்காவில் 2014 ஆம் ஆண்டு முதன்முறையாக தொடங்கப்பட்டது.