Amazon Pay : அமேசான் பே யூபிஐ வசதி ஆண்ட்ராய்டு போன்களுக்கு அறிமுகமானது

Amazon Pay : அமேசான் இந்தியா நிறுவனம், புதிதாக அமேசான் பே யூபிஐ வசதியை ஆண்ட்ராய்டு மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து யூபிஐ ஐடி வழங்க தொடங்கியுள்ளது.

அமேசான் பே யூபிஐ

இ-காமர்ஸ் வலைதளமான அமேசான் தொடர்ந்து இந்திய சந்தையில் பல்வேறு புதிய வசதிகளை டிஜிட்டல் நோக்கத்தில் வழங்கி வருகின்றது. அந்த வகையில், அமேசான் பே செயலி மூலம்  இணையத் வழியாக பண பரிமாற்ற சேவையை தொடங்கியுள்ளது. இந்த அமைப்பு தற்போது ஆண்டிராய்டு இயங்குதள மொபைல் போன்களில் வெளியாகியுள்ளது. இதில் வாடிக்கையார்களின் வங்கி கணக்குகளை இணைத்து அமேசான் செயலி யு.பி.ஐ கணக்கு ஐடியை உருவாக்கலாம்.

மிக விரைவாக டிஜிட்டல் மூலம் பணபரிமாற்றங்களை எளிமையாக மேற்கொள்ள முடியும். அதே சமயம் அமேசான் பே  யூபிஐ வாயிலாக அமேசான் ஆன்லைன் விற்பனை மையத்தில் பொருட்கள் வாங்க மட்டுமல்லாமல், மொபைல் ரீசார்ஜ், மற்றும் பில்களை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் பாதுகாப்பான முறையில் வழங்கப்பட்டுள்ள இந்த சேவையில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு யூபிஐ பரிவர்த்தனை ஒரு லட்சம் ரூபாய் வரை மேற்க்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு வந்துள்ள இந்த சேவை விரைவாக ஐஓஎஸ் தளத்திற்கும் வழங்கப்பட உள்ளது.