ரூ.1300க்கு கொட்டாங்குச்சி விற்பனையை அமேசான் துவங்கியது : Amazon coconut Shell

நம் இல்லங்களில் அடுப்பு எரிக்க பயன்படுத்துப்படுகின்ற கொட்டாங்குச்சி அல்லது தேங்காய் சிரட்டை ஒன்றை சலுகை விலையில் ரூ.1300க்கு விற்பனை செய்ய அமேசான் தொடங்கியுள்ளது. இந்த விற்பனை வெளியீடு இந்தியர்களை அதிர வைத்துள்ளது.

தேங்காய் சிரட்டை

நம் ஊரில் தேங்காய் விலை ரூ.20 முதல் தொடங்குகின்ற நிலையில் கொட்டாங்குச்சியை சலுகையில் விலையில் ரூ.1300 க்கு விற்பனை செய்வதாக குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து பலரும் டிவிட்டரில் கொட்டாங்குச்சி சப்ளை செய்தால் கோடீஸ்வரராக ஆகலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

காசு கொடுத்து வாங்க அவசியமே இல்லாமல், பெரும்பாலான இல்லங்களில் கிடைக்கின்ற சிரட்டை விற்பனை விளம்பரத்தை கண்டு பலரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து டிவிட்டரில் காரசாரமான விவாதம் தொடங்கியுள்ளது.